காசை அள்ளும் காந்தாரா.. ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு காரணம் தமிழ் மக்கள் தான்! ரிஷப் ஷெட்டி ஓபன் டாக்!
ராமநாதபுரம்: காந்தாரா படம் பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், காந்தாரா படத்தின் இயக்குனரும் நடிகருமான நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் கோயிலில் ரிஷப் ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். அப்போது பெங்களூரு பெண் ரசிகை ஒருவர் ரிஷப் ஷெட்டிக்கு முத்தமிட்டு வாழ்த்தினார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம். இதில் ருக்மிணி வசந்த், பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப் படம் வெறும் 16 நாட்களில் ரூ. 717 கோடி வசூலித்துள்ளது.
இதனால், கன்னடத் திரையுலகில் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக இது மாறியுள்ளது. கேஜிஎப்-2 முதல் இடத்தில் உள்ளது. இப்போது வார இறுதி மற்றும் தீபாவளி விடுமுறைகள் வந்துவிட்டதால், 'காந்தாரா: சாப்டர் 1' வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் ஷெட்டி
காந்தாரா சாப்டர் 1 பிளாக்பஸ்டராக மாறியுள்ள நிலையில், ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். முன்னதாக சாமி தரிசனம் செய்ய வந்த ரிஷப் ஷெட்டிக்கு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு வேதாச்சாரியார்கள் வேதம் முழங்க பூரண கும்பம், மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு வந்த ரிஷப் ஷெட்டி ராமநாத சுவாமியை மனமுருகி பிரார்த்தித்து தரிசனம் செய்தார்.
காந்தாரா படம்
இன்று பிரதோஷம் என்பதால் நீண்ட நேரம் ராமநாதசுவாமி சன்னதி முன்பு காத்திருந்து சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்பாள், பிள்ளையார், முருகன், மகாலட்சுமி ஆஞ்சநேயர், நடராஜர் என திருக்கோயில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த கன்னட மற்றும் பல மொழிகளை சேர்ந்த பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரிஷாப் ஷெட்டியுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பெண் ரசிகை
மேலும் பெங்களூரை சேர்ந்த 50 வயது பெண் ரசிகை ஒருவர் ரிஷப் ஷெட்டியை முத்தமிட்டு வாழ்த்தினார். இது பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், காந்தாரா படத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளீர்கள், காந்தாரா வேடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது, சாமி வேடம் அணிந்த உங்களை பார்க்கும்போது அந்த சாமியை நேரடியாக திரையில் பார்த்தது போல் இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் கோவில்
சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷப் ஷெட்டி," காசிக்கு சென்றதால் ராமேஸ்வரம் வந்துள்ளேன். காந்தாரா திரைப்படம் சிவன் மற்றும் காவல் தெய்வத்தை பற்றிய கதையை கருவாக வைத்து இயக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலை தந்துள்ளது. சிவனின் ஆசீர்வாதம் கிடைத்ததின் காரணமாக ராமேஸ்வரம் வந்துள்ளேன். ராமேஸ்வரத்தில் சிறப்பு தரிசனம் கிடைத்தது காசிக்கு சென்று விட்டு ராமேஸ்வரம் வந்துள்ளேன். இன்று ராமேஸ்வரத்தில் மனப்பூர்வமாக தரிசனம் செய்தேன்.
வெற்றி கொண்டாட்டம்
தமிழ்மொழி அல்லாமல் கன்னட மொழியில் எடுத்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்று நல்ல வசூல் தந்ததற்கு தமிழக மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு காரணம் தமிழக மக்களே, எனவே செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் காந்தாரப் படம் வெற்றி அடையச் செய்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காந்தாரா சாப்டர் 1
ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக திரையரங்குகளில் நல்ல முறையில் ஓடுவதால் ஓடிடியில் படத்தை வெளியிடுவது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும். கிராமத்தை விட்டு நகரங்களை நோக்கி செல்லும் மக்கள் கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களை மறவாமல் வழிபட்டு வருகின்றனர். அந்த நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் முழுமையாக காந்தாராவில் வெளிப்படுத்தியதால் இந்த படம் தமிழக மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது" என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications