ஆத்தாடி.. இது என்ன சாலையா.. இல்லை தீவா.. கடல் போல் காட்சியளிக்கும் தாம்பரம் அகரம் சாலை!
Recommended Video
சென்னை: சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அருகே திருவாஞ்சேரியில் உள்ள அகரம் சாலையில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அதன் பிறகு வந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் அந்தளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் ஆண்டுதோறும் தண்ணீர் பஞ்சம், வறட்சி, விவசாயம் செழிப்பின்மை ஆகியவற்றால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கனமழை
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

செம்பரம்பாக்கம் ஏரி
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 மணி நேரத்தில் 146 மி.லிட்டர் மழை கொட்டியது. இதனால் தாம்பரம்- வேளச்சேரி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

வீடுகள்
இந்த நிலையில் முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. தாம்பரம் அருகே திருவாஞ்சேரியில் அகரம் முக்கிய சாலையில் தண்ணீர் தேங்கியது.
|
கடல் போல் காட்சி
இதனால் முக்கிய சாலையில் இரு புறமும் கடல் போல் காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பள்ளம், மேடு தெரியாமல் பயந்து பயந்தே சாலைகளை கடக்கும் நிலை ஏற்பட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications