சென்னை: பிரபல தமிழ் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞரான ரோபோ சங்கர் நேற்று இரவு தனது 46 வயதில் காலமானார். தனுஷ் மற்றும் தளபதி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் தனது நகைச்சுவை நடிப்பால் அறியப்பட்ட இவர், சென்னை GEM மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுவது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட ரோபோ சங்கரின் உடல் அவர் வீட்டில் உறவினர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது, நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச் சடங்கு ஊர்வலம் தொடங்கி உள்ளது.
GEM மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, ரோபோ சங்கர் செப்டம்பர் 16, 2025 அன்று, "கடுமையான இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் சிக்கலான வயிற்றுப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பு" காரணமாக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்து செப்டம்பர் 18 அன்று இரவு 9:05 மணிக்கு காலமானார், என்று கூறப்பட்டு உள்ளது. இவரது மறைவுச் செய்தி வெளியானவுடன், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sep 19, 2025, 5:52 pm IST
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Sep 19, 2025, 5:21 pm IST
வளசரவாக்கம் மின் மயானத்தில் நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அவரது மருமகனும், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவருமான கார்த்திக் மொட்டை அடித்து, இறுதிச் சடங்கை செய்து வருகிறார்.
Sep 19, 2025, 5:11 pm IST
வளசரவாக்கம் மின்மயானத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு கண்ணீருடன் நடனமாடி அவரது மனைவி பிரியாவிடை கொடுத்தார். சற்று நேரத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
Sep 19, 2025, 5:00 pm IST
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவன் நகர் மின் மயானத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படவுள்ளது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் இறுதிச் சடங்கை செய்யவுள்ளார்.
Sep 19, 2025, 4:29 pm IST
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Sep 19, 2025, 4:11 pm IST
ரோபோ சங்கர் உடனான தங்களது நினைவுகளை இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் வையாபுரி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டது. சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
Sep 19, 2025, 3:42 pm IST
சென்னை வளசரவாக்கத்தில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ரோபோ சங்கரின் உடலுக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் கண்ணீர் அஞ்சலி. வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
Sep 19, 2025, 3:14 pm IST
நடிகர் ரோபோ சங்கரின் (Robo Shankar Death news) உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிய போது சற்று நிலைத்தடுமாறியதால் பதறிய மகள் இந்திரஜா, "அண்ணா ஏன் ணா இப்படி பண்றீங்க, அப்பாணா" என அழுதபடியே சொன்னது காண்போரை கலங்க வைத்தது.
Sep 19, 2025, 2:15 pm IST
ரோபோ சங்கரின் அண்ணன் சிவகாசி சிவா பேசும்போது, "நான் ரோபோ சங்கரின் அண்ணன், சிவகாசி சிவா. நாங்க மொத்தம் நாலு அண்ணன் தம்பிகள். இரண்டு அண்ணன்கள் ஏற்கனவே இறந்துபோயிட்டாங்க. எங்க வீட்டுல ரோபோ சங்கர் தான் கடைக்குட்டி. ஆனால் இப்போ அவனுடைய நிலையைப் பார்க்கும்போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியல. அவனுடைய இழப்பு எங்க குடும்பத்துக்கே பெரிய இழப்பு. அவன் விட்டுட்டு போன இடத்துக்கு, இனி அவன் தான் மீண்டும் பிறந்து வந்து நிரப்பணும்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
Sep 19, 2025, 2:10 pm IST
ரோபோ சங்கரின் மறைவுச் செய்தி கேட்டதும், நடிகர் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜய பிரபாகரன், தனது கையில் ஒரு வெள்ளை கவரை வைத்திருந்தார், அது விஜயகாந்தின் தாராள மனப்பான்மையை நினைவுபடுத்தியது. தந்தையைப் போலவே மகனும், துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு நேரடியாக உதவ வந்ததை, பலர் பாராட்டி வருகின்றனர்.
Sep 19, 2025, 1:19 pm IST
ரோபோ சங்கர் மறைவுச் செய்தி தமிழ் திரையுலகிலும், ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றிய நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன், சமூக ஊடகங்களில் தனது இரங்கலைத் தெரிவித்தார். "ரோபோ சங்கரின் சிரிப்பு எப்போதும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
Sep 19, 2025, 1:02 pm IST
தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் துடிப்பான நடிப்பிற்காக அறியப்பட்ட ரோபோ சங்கர், தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றார். பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். மாரி, விஸ்வாசம், காஞ்சனா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவரது ஆற்றல், மிமிக்ரி திறன்கள் மற்றும் சிறிய வேடங்களையும் மறக்க முடியாததாக மாற்றும் திறன் ஆகியவை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
Sep 19, 2025, 12:32 pm IST
மருத்துவமனை வட்டாரங்களின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், நீரிழப்பு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sep 19, 2025, 11:59 am IST
மதுரையில் பிறந்த சங்கர், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் பாடி லாங்குவேஜ் திறமைகளால் விஜய் டிவியில் நடைபெற்ற கலக்கப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் புகழ் பெற்றார்.
Sep 19, 2025, 11:38 am IST
நடிகருமான சினேகன், செய்தியாளர்களிடம் உருக்கமாகப் பேசினார். "ரோபோ சங்கர் ஏறிய முதல் மேடையிலிருந்தே நான் அவருடன் இருந்திருக்கிறேன். எந்த மேடையாக இருந்தாலும், அதைத் தனக்குரியதாக மாற்றிக்கொள்வார். எனது உடல்நிலையை சரியாக கவனிக்கவில்லை என என்னைப்போல் பல நண்பர்கள் அவரிடம் கவலைப்பட்டிருக்கிறோம். இருந்தபோதும், மனம் சொன்னதை மட்டுமே கேட்டுச் செயல்பட்டார். அதனால்தான் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
Sep 19, 2025, 10:56 am IST
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், நடிகர் இளவரசு ஒரு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் தனது ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிடுவதற்காக, உடலெங்கும் சில்வர் பெயிண்ட் அடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த பெயிண்டை நீக்குவதற்காக, மண்ணெண்ணெய் வைத்துத் துடைப்பாராம். தொடர்ந்து இவ்வாறு செய்ததால், அவரது தோலின் வலு குறைந்து, அதுவே மஞ்சள் காமாலை வருவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும், இதுவே அவரது திடீர் மரணத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் இளவரசு கூறியுள்ளார்.
Sep 19, 2025, 10:49 am IST
ரோபோ சங்கர் மறைவிற்கு விஜய் இரங்கல். ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர் என்று விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவு குறித்து செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் புரட்டாசி மாதம் முதல் நாளே மரண செய்தியை டிவி சேனல்கள் லைவ் காட்டுவது சரியில்லை என்று அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
Sep 19, 2025, 10:17 am IST
மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் இருப்பதும் தெரியவந்தது.
Sep 19, 2025, 10:17 am IST
கடந்த சில மாதங்களாகவே ரோபோ சங்கர் உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டறியப்பட்டது.
Sep 19, 2025, 10:16 am IST
அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sep 19, 2025, 10:16 am IST
உடனடியாக பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Sep 19, 2025, 10:16 am IST
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார்.
Sep 19, 2025, 10:16 am IST
ரோபோ சங்கர், மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
10:16 AM, 19 Sep
ரோபோ சங்கர், மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
10:16 AM, 19 Sep
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார்.
10:16 AM, 19 Sep
உடனடியாக பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
10:16 AM, 19 Sep
அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
10:17 AM, 19 Sep
கடந்த சில மாதங்களாகவே ரோபோ சங்கர் உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டறியப்பட்டது.
10:17 AM, 19 Sep
மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் இருப்பதும் தெரியவந்தது.
10:47 AM, 19 Sep
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவு குறித்து செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் புரட்டாசி மாதம் முதல் நாளே மரண செய்தியை டிவி சேனல்கள் லைவ் காட்டுவது சரியில்லை என்று அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
10:49 AM, 19 Sep
ரோபோ சங்கர் மறைவிற்கு விஜய் இரங்கல். ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர் என்று விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், நடிகர் இளவரசு ஒரு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் தனது ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிடுவதற்காக, உடலெங்கும் சில்வர் பெயிண்ட் அடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த பெயிண்டை நீக்குவதற்காக, மண்ணெண்ணெய் வைத்துத் துடைப்பாராம். தொடர்ந்து இவ்வாறு செய்ததால், அவரது தோலின் வலு குறைந்து, அதுவே மஞ்சள் காமாலை வருவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும், இதுவே அவரது திடீர் மரணத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் இளவரசு கூறியுள்ளார்.
11:38 AM, 19 Sep
நடிகருமான சினேகன், செய்தியாளர்களிடம் உருக்கமாகப் பேசினார். "ரோபோ சங்கர் ஏறிய முதல் மேடையிலிருந்தே நான் அவருடன் இருந்திருக்கிறேன். எந்த மேடையாக இருந்தாலும், அதைத் தனக்குரியதாக மாற்றிக்கொள்வார். எனது உடல்நிலையை சரியாக கவனிக்கவில்லை என என்னைப்போல் பல நண்பர்கள் அவரிடம் கவலைப்பட்டிருக்கிறோம். இருந்தபோதும், மனம் சொன்னதை மட்டுமே கேட்டுச் செயல்பட்டார். அதனால்தான் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
11:59 AM, 19 Sep
மதுரையில் பிறந்த சங்கர், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் பாடி லாங்குவேஜ் திறமைகளால் விஜய் டிவியில் நடைபெற்ற கலக்கப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் புகழ் பெற்றார்.
12:32 PM, 19 Sep
மருத்துவமனை வட்டாரங்களின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், நீரிழப்பு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
1:02 PM, 19 Sep
தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் துடிப்பான நடிப்பிற்காக அறியப்பட்ட ரோபோ சங்கர், தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றார். பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். மாரி, விஸ்வாசம், காஞ்சனா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவரது ஆற்றல், மிமிக்ரி திறன்கள் மற்றும் சிறிய வேடங்களையும் மறக்க முடியாததாக மாற்றும் திறன் ஆகியவை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
1:19 PM, 19 Sep
ரோபோ சங்கர் மறைவுச் செய்தி தமிழ் திரையுலகிலும், ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றிய நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன், சமூக ஊடகங்களில் தனது இரங்கலைத் தெரிவித்தார். "ரோபோ சங்கரின் சிரிப்பு எப்போதும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
2:10 PM, 19 Sep
ரோபோ சங்கரின் மறைவுச் செய்தி கேட்டதும், நடிகர் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜய பிரபாகரன், தனது கையில் ஒரு வெள்ளை கவரை வைத்திருந்தார், அது விஜயகாந்தின் தாராள மனப்பான்மையை நினைவுபடுத்தியது. தந்தையைப் போலவே மகனும், துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு நேரடியாக உதவ வந்ததை, பலர் பாராட்டி வருகின்றனர்.
2:15 PM, 19 Sep
ரோபோ சங்கரின் அண்ணன் சிவகாசி சிவா பேசும்போது, "நான் ரோபோ சங்கரின் அண்ணன், சிவகாசி சிவா. நாங்க மொத்தம் நாலு அண்ணன் தம்பிகள். இரண்டு அண்ணன்கள் ஏற்கனவே இறந்துபோயிட்டாங்க. எங்க வீட்டுல ரோபோ சங்கர் தான் கடைக்குட்டி. ஆனால் இப்போ அவனுடைய நிலையைப் பார்க்கும்போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியல. அவனுடைய இழப்பு எங்க குடும்பத்துக்கே பெரிய இழப்பு. அவன் விட்டுட்டு போன இடத்துக்கு, இனி அவன் தான் மீண்டும் பிறந்து வந்து நிரப்பணும்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
3:14 PM, 19 Sep
நடிகர் ரோபோ சங்கரின் (Robo Shankar Death news) உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிய போது சற்று நிலைத்தடுமாறியதால் பதறிய மகள் இந்திரஜா, "அண்ணா ஏன் ணா இப்படி பண்றீங்க, அப்பாணா" என அழுதபடியே சொன்னது காண்போரை கலங்க வைத்தது.
3:42 PM, 19 Sep
சென்னை வளசரவாக்கத்தில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ரோபோ சங்கரின் உடலுக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் கண்ணீர் அஞ்சலி. வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
4:11 PM, 19 Sep
ரோபோ சங்கர் உடனான தங்களது நினைவுகளை இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் வையாபுரி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டது. சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
4:29 PM, 19 Sep
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
5:00 PM, 19 Sep
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவன் நகர் மின் மயானத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படவுள்ளது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் இறுதிச் சடங்கை செய்யவுள்ளார்.
5:11 PM, 19 Sep
வளசரவாக்கம் மின்மயானத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு கண்ணீருடன் நடனமாடி அவரது மனைவி பிரியாவிடை கொடுத்தார். சற்று நேரத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
5:21 PM, 19 Sep
வளசரவாக்கம் மின் மயானத்தில் நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அவரது மருமகனும், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவருமான கார்த்திக் மொட்டை அடித்து, இறுதிச் சடங்கை செய்து வருகிறார்.
5:52 PM, 19 Sep