எதிர்பார்த்ததை விட ஆழம்.. இந்தியா - பாகிஸ்தான் போரில்.. சீனா ஆடிய சீக்ரெட் ஆட்டம்.. ஷாக் பின்னணி
சென்னை: இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான்.

இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கத்து சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலாக இடத்தி எல்லாமே இயக்க ஆட்களையும் அனுப்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
அதாவது இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட ஆழமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன.
சீனா நிழல் யுத்தம்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி , சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்த டிரோன்களை பாகிஸ்தானிடம் தந்து சீனா சோதனை செய்ததாகவும், சீனாவின் சில ஏவுகணைகளையும் சீனா பாகிஸ்தான் வழியாக சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
எக்ஸ் பக்கம்
இந்த போருக்கு சில நாட்களுக்கு முன்பே பாகிஸ்தானில் எக்ஸ் பக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனா என்கிறார்கள். அதாவது இந்தியாவிற்கு எதிராக போடப்பட்ட போஸ்டுகள் எல்லாம் பாகிஸ்தான் வழியாக சீனர்கள் செய்த போஸ்ட் என்று கூறப்படுகிறது.
அதாவது இந்தியாவின் இமேஜை அழிக்க சீனர்கள் களமிறக்கப்பட்டு ஆன்லைன் போரை சீனா நிழல் யுத்தமாக நடத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் போர் வந்தால் ஆன்லைனில் எப்படி narrative உருவாக்குவது என்பதை பாகிஸ்தான் வழியாக சீனா இந்த முறை கற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போரை எதிர்கால போருக்கான பயிற்சியாக மேற்கொண்டு இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications