அமர்நாத்தை உத்தர பிரதேசத்திற்கு மாற்றுவதால் கீழடி ஆய்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது! சொல்கிறார் கரு நாகராஜன்
சென்னை: கீழடியை ஆய்வு செய்து நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த இடமாற்றத்தை எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் கரு நாகராஜன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தேசிய தொல்லியல் & நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணன் இருக்கிறார். கடந்த 2014 முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடந்தபோது, தொல்லியல் கண்காணிப்பாளராக அமர்நாத் தான் பணியாற்றி இருந்தார். இவரது டீம் நடத்திய ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களில் தான் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம் கண்டறியப்பட்டது.

அமர்நாத் ராமகிருஷ்ணன்
இதற்கிடையே அவர் தமிழகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்குத் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவர் மீண்டும் தமிழகத்தில் பணியமர்த்தப்படவில்லை. இதற்கிடையே கீழடியில் நடந்த முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கைகளை 2023 ஜனவரி மாதமே இந்தியத் தொல்லியல் துறையிடம் அமர்நாத் சமர்ப்பித்தார்.
இருப்பினும், அதை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்கிடையே சமீபத்தில் அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்லி அமர்நாத்திற்கு தொல்லியல் துறை கடிதம் எழுதியிருந்தது. அதில் கி.மு. 5ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டு வரையிலான ஆய்வுகளுக்கு ஆதாரங்கள் தேவை என்றும் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், கூடுதல் ஆதாரம் அல்லது திருத்தங்கள் தேவையில்லை என அமர்நாத் பதில் கடிதம் எழுதினார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம்
இதற்கிடையே அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் பணியாற்றி வந்த அவர் நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு எதிராக, தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் பாரபட்சமான நடவடிக்கை இது என அவர் சாடியிருந்தார்.
கரு நாகராஜன்
இருப்பினும், இது வழக்கமான இடமாற்றம் தான் என பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "மத்திய அரசு அந்த துறை மற்றும் அதற்கான பணிகளுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும். அவர் ஏற்கனவே டெல்லியில் சிறப்பாக பணியாற்றியவர் தான். அங்கிருந்து கீழடி போல நாடு முழுக்க தொல்லியல் துறையின் இடங்களுக்குச் சென்று சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இப்போதும் அவரது பணி மேலும் சிறப்பாக அமையக் கூட பணியிட மாறுதல் நடந்திருக்கலாம் தானே.!
வழக்கமான இடமாற்றம் தான்
உத்தரப் பிரதேசம் போவதால் அவர் கீழடி குறித்துப் பேசக்கூடாது.. தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கக்கூடாது எந்தவொரு அறிக்கையும் கொடுக்கக்கூடாது என இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இதற்கு முன்பு டெல்லியில் இருந்த போதும் அவர் கீழடி குறித்து ஆய்வு செய்திருக்கிறார். கருத்துகளைச் சேகரித்துச் சொல்லி இருக்கிறார்.
இதையும் உடனே முதல்வர் விமர்சிக்கலாம்.. பார்த்தீர்களா நமது வரலாற்றை மறைக்க முயல்கிறார்கள் என்ற ஒரு கற்பனை வசனத்தை அவர் ரெடி செய்து வைத்திருக்கலாம். அப்படி எல்லாம் இதுவும் இல்லை. இது எதார்த்தமாக நடந்த பணியிட மாற்றமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்" என்றார்.
-
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக












Click it and Unblock the Notifications