ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யுங்க.. இல்லாவிட்டால் தற்கொலை செய்வேன்.. சென்னையில் பெண்கள் ஆவேசம்
ரவுடி பேபி சூர்யாவை கைது செய்ய பெண்கள் போராட்டம் செய்துள்ளனர்
சென்னை: ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிக்டாக்கில் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா.. டிக்டாக்கை தடை செய்து வந்த போதிலும், இவர் மீதான சர்ச்சைகளும் பரபரப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் பெண்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வருவதாகவும், இதற்காக பணக்கஷ்டத்தில் உள்ள பெண்களுக்கு குறி வைப்பதாகவும் கூறப்படுகிறது.. இது தொடர்பான பல்வேறு செய்திகளும் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளன.

சிறுமிகள்
இந்நிலையில், பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என்று அனைவரின் போட்டோக்களையும் மார்ஃபிங் செய்து சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவேன் என சூர்யா மிரட்டுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சில பெண்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் அளித்தனர். ஏற்கனவே இவர்கள் இது தொடர்பாக 2 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று மறுபடியும் புகார் சொல்ல வந்திருந்தனர்..

குற்றச்சாட்டு
ஆனால், அந்த பெண்களை போலீசார் நீண்ட நேரம் காக்கவைத்து, விசாரிக்காமலேயே திருப்பி அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.. இதனால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கமிஷனர் ஆபீஸ் முன்பேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.. முழக்கமிட்டனர்.. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்..

கண்ணீரை
போராட்டம் நடத்திய பெண் ஒருவர் இதை பற்றி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "ரவுடி பேபி சூர்யாவின் அடாவடித்தனத்தை தட்டிக் கேட்டதற்காக அவர் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்...என்னை பழி வாங்க ரவுடி பேபி சூர்யா தனது ஆண் நண்பருடன் இணைந்து, என்னுடைய போட்டோ, செல்போன் நம்பரை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... இதனால் கடந்த 3 மாதங்களாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

பரபப்பு
இது குறித்து 2 முறை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.. நாளைக்குள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யாவிட்டால் எனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வேன்" என்று கண்ணீர் மல்க கூறினார்... பெண்கள் நடத்திய இந்த திடீர் மறியல் போராட்டத்தினால் கமிஷனர் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications