சென்னை கொரட்டூரில் ரவுடி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. போலீஸை தாக்க முயன்றதால் அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் அந்த பகுதியில் ரவுடிசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் காவல்நிலையங்களில் உள்ளது.

இந்நிலையில் சென்னை கொரட்டூரில் ரவுடி மணிகண்டன் பதுங்கி இருப்பதாக விழுப்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கொரட்டூர் சென்று மணிகண்டனை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசை ரவுடி மணிகண்டன் கத்தியால் தாக்க முயன்றதால் எஸ்.ஐ பிரபு மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி மணிகண்டன் உயிரிழந்தார்.
சென்னையில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக சென்னை கொரட்டூரில் பதற்றமும் பரரப்பும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications