ரூ.1.2 கோடி கொள்ளை விவகாரம்! பாஜக நிர்வாகி உட்பட 2 ரவுடிகளை தட்டித்தூக்கிய ஆவடி போலீஸ்!
சென்னை: சென்னை அம்பத்தூரில் ரூ.1.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவில் மாநிலளவில் பொறுப்பு வகிக்கும் மிண்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளி மகேஷ் ஆகிய இருவரையும் ஆவடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையர் அருண், அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஆவடி மாநகர பகுதியில் வணிகம் செய்பவர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் காவல் ஆணைய அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை அம்பத்துர் பகுதியை சேர்ந்த 3 சகோதரிகள் தங்களுக்கு சொந்தமான 13 கிரவுண்ட் நிலத்தை விற்பனை செய்ய முனைந்துள்ளனர். இதனையறிந்து கொண்ட மிண்ட் ரமேஷும், மகேஷும், உள்ளே புகுந்து தங்கள் பராக்கிராமங்களை காட்டியதோது சொத்து கைமாறிய அன்றே அந்த 3 சகோதரிகளிடம் இருந்து ரூ.1.2 கோடியை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து இது குறித்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பாஜக மாநில நிர்வாகியான மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளி மகேஷ் ஆகியோரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இதில் தொடர்புடைய இருவர் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், குற்றப்பிண்ணயும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஆவடி காவல் ஆணையர் அருண், ஆவடி காவல்சரகத்திற்குட்பட்ட மக்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல மக்களை அச்சுறுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யார் முயற்சித்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே விடுத்துள்ளார்.
பாஜக மாநில நிர்வாகியை கைது செய்துள்ள நிலையில் இந்தப் பதிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் ரவுடிகள்












Click it and Unblock the Notifications