அடிதூள்.. ஸ்டாலின் அறிவித்த ரூ.1000 எப்போது? "இவங்களுக்கு" மட்டும் கிடையாதாமே.. அமைச்சர் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகள் அத்தனையும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.. அதில் அனைவரையும் ஈர்த்தது, பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்பதான அறிவிப்புதான்.

இந்த அறிவிப்பு பற்றி தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.. ஆனால், கடந்த 3 மாதங்களாகவே 1000 ரூபாய் அறிவிப்பை நோக்கி தமிழகம் காத்துள்ளது.. மற்றொரு பக்கம் மக்களே பொறுமையாக இருந்தாலும் அதிமுக, இதை பிரச்சாரமாக்கி வருகிறது.

 திமுக அரசு

திமுக அரசு

போலி வாக்குறுதிகள், பொய்யான அறிவிப்புகள் என்று திமுக அரசை விமர்சித்து வருகிறது.. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும், ஒரு சில வாக்குறுதிகளையே திமுக நிறைவேற்றியுள்ளதாகவும், நீட் ரத்து, மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக இன்னமும் நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றது.

 ஏமாற்ற மாட்டோம்

ஏமாற்ற மாட்டோம்

இந்த சூழலில் கடந்த 13-ம் தேதி திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்... அப்போது, "பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப் போகிறோம்... யாரையும் ஏமாற்ற மாட்டோம்" என்று உறுதி தந்திருந்தார்..

 அரசு விளக்கம்

அரசு விளக்கம்

இதனிடையே உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டன.. அதில், தமிழக அரசின் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டிருந்தன.. இந்த விண்ணப்பங்கள் விநியோகித்து வருவதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.. இன்னும் திட்டமே அறிவிக்கவில்லை.. அதற்குள் விண்ணப்பமா? என்று கேள்வி எழுப்பினர்.

 1000 ரூபாய்

1000 ரூபாய்

இந்நிலையில், பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகைக்கான விண்ணப்பம் எதுவும் தரவில்லை என்று தமிழக அரசே தற்போது விளக்கம் தந்துவிட்டது.. எனினும், 1000 ரூபாய் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்வி எழுப்பி வருவதால், விரைவில் மக்களுக்கு 1000 ரூபாய் தரபோகிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 மோடி ஆட்சி

மோடி ஆட்சி

சாத்தூர் பிரச்சாரத்தின்போது அமைச்சர் பேசியதாவது: "தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிக்கு மட்டும் தான் 1000 ரூபாய் வழங்கப்படும்.. குடும்பத்தலைவர் வந்து கேட்டால் வழங்கப்பட மாட்டாது... குடும்பத் தலைவிகளுக்கு 1000 வழங்கும் திட்டம் 2 மாதங்களில் தொடங்கப்படும்.. மோடி ஆட்சியில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

 பாதாள சாக்கடை

பாதாள சாக்கடை

விலை உயர்ந்து கொண்டே சென்றால் ஏழைகள் சமையல் எரிவாயு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். சாத்தூர் பகுதியில் திமுக ஆட்சியில் தான் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதனால், அனைவரும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். விலை உயர்ந்து கொண்டே சென்றால் ஏழைகள் சமையல் எரிவாயு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். சாத்தூர் பகுதியில் திமுக ஆட்சியில் தான் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதனால், அனைவரும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+