ஜாக்பாட்! பொங்கலுக்கு வேட்டை! இந்த மாசம் மட்டும் மகளிர் உரிமை தொகை ரூ 5000! யாருக்கு தெரியுமா?
சென்னை: கலைஞர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் தொடக்கத்திலேயே 1 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது வரை 1.06 கோடிக்கும் மேலானோர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பெற்று வருகிறார்கள். அந்த தொகை மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வங்கி வரவு வைக்கப்படுகிறது. ஏற்கெனவே 1 கோடியே 6 லட்சத்திற்கும் மேலானோருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு மனுக்கள் வரபெற்றது .அவற்றையும் தமிழக அரசு பரிசீலனை செய்து திட்டத்தை செயல்படுத்த கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முதல்கட்டமாக 1.06 கோடி பேருக்கும் இரண்டாவது கட்டமாக 7.35 லட்சம் பேருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3ஆவது கட்டமாக தகுதியானவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும். இந்த நிலையில் இந்த மாதமே தகுதியான நபர்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படு்ம என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 5 மாதங்களுக்கு ரூ 5000 வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் ரூ 1000 பொங்கல் பரிசுடன் சேர்த்தால் ரூ 6000 கிடைக்கும். அது போல் வெள்ள நிவாரண நிதி ரூ 6000 த்தை சேர்த்தால் கடந்த டிசம்பர், ஜனவரியில் 12 ஆயிரம் ரூபாயை பெறுவார்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications