Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியைக்கு நேற்று 3 முறை தங்கம் விலை உயர்வு! ஒரே நாளில் இத்தனை கோடிக்கு நகைகள் விற்பனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அட்சய திருதியையை முன்னிட்டு நேற்றைய தினம் ரூ 14 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன. இன்றும் சில நகைக் கடைகளில் விடிய விடிய விற்பனை நடந்தது.

அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். இருக்கப்பட்டவர்கள் தங்கம் வாங்குவர். இல்லாதவர்கள், தங்களால் இயன்ற பொருளை வாங்கலாம்.

Rs 14000 crores of gold purchased for Akshaya Tritiya 2024

பலர் நிலம், வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்குவது வழக்கம். அது போல் சிலர் கல் உப்பை கூட வாங்கி வைப்பர். இதுவும் லட்சுமி கடாட்சம்தான். அந்த வகையில் அட்சய திருதியை என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கும் என்பார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் எல்லோராலும் தங்கம் வாங்க முடியாது.

இதற்காக உப்பு, அரிசி, ஆடைகள், சிறிய பாத்திரம் உள்ளிட்டவைகளில் எது வேண்டுமானாலும் வாங்கலாம். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்றைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இதனால் நேற்று காலை 6 மணிக்கே நகைக் கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 3 முறை உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 54,160க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை சவரனுக்கு ரூ 360 உயர்ந்தது., இதனால் சவரன் விலை ரூ 53,280 க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ 6660 க்கு விற்பனை செய்யப்பட்டது.

அது போல் இரண்டாவது முறையாக மீண்டும் ரூ 360 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை ரூ 110 க்கு உயர்ந்தது. இதனால் கிராம் ஒன்று ரூ 6770க்கு விற்பனையானது, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ 54,160 க்கு விற்கப்பட்டது.

தொடர்ந்து ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்த போதிலும் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதாவது நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1240 விலை உயர்ந்தது. ஆயினும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானது. அதாவது 24,000 கிலோ தங்கம் விற்பனையானதாக சொல்லப்படுகிறது.

இதில் 80 சதவீதம் நகைகளாகவும் 20 சதவீதம் நாணயங்களாகவும் மக்கள் வாங்கினர். கடந்த ஆண்டு அட்சய திருதியைக்கு ரூ 11 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அதைவிட 3000 கோடி ரூபாய் அதிகரித்து ரூ 14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையானது.

பிரபல நகைக் கடைகளில் தங்கம் வாங்க கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. பிறகு பில்லிங் போடும் இடத்தில் கூட அதிக அளவு கூட்டம் இருந்ததால் விடிய விடிய மக்கள் நகைக் கடைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது போல் பலர் ஒரு குண்டுமணியையாவது வாங்க வேண்டும் என்பதற்காக பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்திவிட்டு அழகு பார்த்தனர். அந்த மூக்கு குத்தும் தொழிலாளர்களிடம் கூட அதிக அளவு கூட்டம் அலைமோதியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+