ரூ.2000 நோட்டுகளை.. இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்.. எப்படி மாற்றுவது? என்ன செய்ய வேண்டும்?
சென்னை: திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை இன்றில் இருந்து வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது இன்று முதல் தங்கள் சொந்தக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.

2000 ரூபாயை மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்து உள்ளது . ரூ.2000 கரன்சி நோட்டுகள் செப்டம்பர் 30க்குப் பிறகும் சட்டப்பூர்வமான டெண்டராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.
அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
வழங்க கூடாது:
அதேபோல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ளவர்கள் பணத்தை கடைகளில் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். 20 ஆயிரம் ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.
அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. இந்த நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் இந்த ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு உள்ளன.
எப்படி மாற்றுவது?
படி 1: வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள வங்கியின் கிளைக்குச் சென்று ரூபாயை கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதில் ஆதார் கார்ட் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை வழங்க வேண்டும்.
படி 2 - ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வங்கிக் கணக்குகள் இல்லாத வாடிக்கையாளர்கள் கூட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளுடன் மாற்றலாம்/டெபாசிட் செய்யலாம்.
படி 3 - வங்கிகளில் நாம் பணத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னதும்.. அவர்கள் ஒரு ஸ்லிப் கொடுப்பார்கள். அதை வாடிக்கையாளர் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் பணம் மாற்றும் நபரின் பெயர் போன்ற அடிப்படை விவரங்கள் மற்றும் எத்தனை 2000 நோட்டுகள் உள்ளன என்ற எண்ணிக்கை மற்றும் அதன் மதிப்பு போன்ற .விவரங்களை கொடுக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் பரிமாற்றம் செய்யப்படும் இடம் மற்றும் தேதியையும் குறிப்பிட வேண்டும். ஆனால் 20 ஆயிரம் வரை பணத்தை மாற்ற இந்த விவரங்களை கொடுக்க வேண்டியது இல்லை.
படி 4 - பின்னர் இதில் கையெழுத்து போட்டு 2000 ரூபாயுடன் கொடுத்தால் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
அதே சமயம் செப்டம்பர் 30 வரை இந்த பணம் புழக்கத்தில் இருக்கும் என்பதால் அது வரை கடைகளில் கூட இந்த பணத்தை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications