உறவினர் கொடுத்த வாக்குமூலம்.. ரூ.4 கோடி விவகாரத்தில் பாஜக நயினார் நாகேந்திரனுக்கு பெரும் சிக்கல்?
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயினார் நாகேந்திரன், அவரது உறவினர் மணிகண்டனுக்கு நாளை சம்மன் அளிக்கப்பட உள்ளது.
கடந்த 7 ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியானது. பணத்தை கொண்டு வந்த சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரனையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூன்று பேரும் கொடுத்தனுப்பியதாக தெரிவித்தனர். இதன் அடிப்படையில் முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகிய மூன்று பேருக்கும் தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
சம்மன் அனுப்ப முடிவு: இதன்பேரில் மூன்று பேரும் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜராகினர். இதில் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் அளித்த வாக்கு மூலத்தில், தனக்கும் இந்த பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் என்னை தொடர்பு கொண்டு, மூன்று நபர்கள் பணம் எடுத்து வருவதாகவும் அவர்களுக்கு 2 நபர்களை பாதுகாப்புக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டதால் மட்டுமே ஜெய்சங்கர் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோரை தான் அனுப்பியதாக கூறியுள்ளார்.
முருகன் சென்னையில் 4 ஹோட்டல்களை லீசுக்கு எடுத்து வருவதும், அதில், ஆசைத்தம்பி மற்றும் ஜெய்சங்கர் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் உறவினர் அளித்த வாக்கு மூலம் அவருக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அதாவது தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு நாளை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அவரது உறவினர் மணிகண்டனுக்கும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
4 கோடி ரூபாய் பறிமுதல்: கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சதீஷிடம் விசாரணை: பிடிபட்டவர்கள், பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமாக புரசைவாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
10 நாட்கள் அவகாசம்: நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனுக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications