கொடுங்கையூர், பெருங்குடி குப்பை விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் கட்டுமான கழிவுகள் அனைத்தையும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அங்கு எடை கணக்கீடு செய்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்தை மாநகராட்சியின் இணையதளம் மூலமாக செலுத்திய பின்னரே கட்டிட கழிவுகள் குப்பை கொட்டும் வளாகங்களில் அனுமதிக்கப்படும் என்றும் இதற்காக டன் ஒன்றுக்கு ரூ.800 செலுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் முன்பு போல் கண்ட இடங்களில் குப்பையை கொட்டிவிட முடியாது. ஏனெனில் குப்பை தொட்டிகளே பல இடங்களில் கிடையாது. குப்பை கொட்ட வேண்டும் என்றால், வீட்டிற்கே வந்து குப்பை சேகரிப்பவர்களிடம் மட்டுமே தர வேண்டும். நீங்களே போய் குப்பை தொட்டியில் குப்பையை போட நினைத்தாலும் போட முடியாது. ஏனெனில் ஒரு ஏரியாவிற்கு ஒரு இடத்தில் மட்டுமே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று கொட்ட போனால், தூய்மை பணியாளர்கள் அனுமதிப்பது இல்லை.. வீட்டிற்கு வருபவர்களிடம் போடுமாறு கூறுகிறார்கள்..

ஏனெனில் குப்பை தொட்டி நிரம்பி வழிந்து அந்த பகுதியே தூய்மையற்றதாகவும், மோசமாகவும் மாறிவிடுவதே இதற்கு காரணம் ஆகும். அதேபோல் கட்டிட கழிவுகளை கண்ட இடத்தில் கொட்டாமல் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்ட வேண்டும் என்றும் அதற்கு ஒரு டன்னுக்கு 800 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: "சிறிய வீடுகள் பழுதுபார்ப்பு, ஓடுகள், குளியல் தொட்டிகள், அலமாரிகள், உடைந்த பீங்கான் பொருட்கள் மூலம் 1 டன் வரை மிகச்சிறிய அளவில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் திருவொற்றியூர், பக்கிங்காம் கால்வாய் சாலை, கொடுங்கையூர் குப்பை கிடங்கு, வானகரம் சாலையில் உள்ள அத்திப்பட்டு குப்பை கிடங்கு, செனாய் நகர், நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரை அருகே, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் உள்ளிட்ட 15 இடங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும்.
கட்டுமான கழிவுகள் அனைத்தையும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு எடை கணக்கீடு செய்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்தை மாநகராட்சியின் இணையதளம் மூலமாக செலுத்திய பின்னரே கட்டிட கழிவுகள் குப்பை கொட்டும் வளாகங்களில் அனுமதிக்கப்படும். இதற்காக டன் ஒன்றுக்கு ரூ.800 செலுத்த வேண்டும்.
மாநகராட்சியின் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும். சிறிய அளவில் கழிவுகளை உருவாக்கி அதை மழைநீர் வடிகால், திறந்தவெளியில் கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 6 ஆயிரம் சதுர மீட்டர் கட்டுமானப் பணியின்போது கொட்டப்படும் இடிபாட்டு கழிவுகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வரும் 21-ந்தேதி முதல் இது அமல்படுத்தப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications