ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்? யார் தந்த புகார் பேரில் சோதனை? கோர்ட்டில் அமலாக்கத்துறை எப்ஐஆர் தாக்கல்?
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, எந்த முதல் தகவல் அறிக்கையின்படி சோதனை நடத்தப்பட்டதோ, அதை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர்.. இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

முதல் தகவல் அறிக்கை
இந்த வழக்கானது, நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர், "விசாரணையை தொடங்கிய அன்றே அமலாக்கத்துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்ததில் சோதனை நடத்தியதற்கான நோக்கம் என்ன? சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை.
மத்திய விசாரணை அமைப்புகளுக்கு அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திரும்ப பெற்றதை அடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை. FIR இல்லாமல் வாதங்களை முன்வைப்பது இயலாத காரியம்.
டாஸ்மாக் முறைகேடு
நாட்டிலுள்ள 29 மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த தொடங்கினால் அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்'' என்று வாதிட்டனர்.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், "அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்'' என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு அமலாக்கத் துறைக்கு தமிழ்நாடு அரசு உதவலாமே? என கேள்வி எழுப்பினார்கள்..
1000 கோடி மோசடி
இதற்கு பதிலளித்த பி.எஸ்.ராமன், ''சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும்? அமலாக்கத்துறையின் சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம்? என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய அமைப்பு விசாரணை நடத்த மாநில அரசின் உதவியை கேட்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ரூ.1 கோடி, ரூ.30 லட்சம் ரூபாய் ஆதாயத்துக்காக குற்றம் நடந்திருந்தால், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டியது கட்டாயம்.
அமலாக்கத்துறை
அதற்காக, விசாரணை நடத்தப்படுவதால் மட்டுமே குற்றம் உறுதி செய்யப்பட்டதாக அர்த்தம் இல்லை. அதற்காக விசாரணை நடத்தவே கூடாது எனவும் கூற முடியாது. எந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது?
இந்த வழக்கில், அமலாக்கத்துறை சோதனையின் போது மனித உரிமை மீறப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற சட்டரீதியாக உரிமை உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் மீது புகார் வந்தால் மாநில அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
விசாரணை தவறு இல்லையே
அரசின் நிறுவனத்தில், ஒரு பகுதி அலுவலர் முறைகேடு செய்ததாக புகார் வந்தால், தொடர்புடைய நிறுவனத்தில் விசாரணை செய்வது தவறு இல்லையே? முறைகேடு தொடர்பாக காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறினர்.
அத்துடன், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை (FIR) தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (இன்று புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications