கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. ரூ.1000-ல் வியப்பூட்டும் தமிழ்நாடு..அரசுக்கு வைரமுத்து விடுத்த கோரிக்கை
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வலுத்துவரும் நிலையில், பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவும் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அது என்ன?
தமிழக சட்டசபையில் கடந்த 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படியொரு அறிவிப்பினை தமிழக அரசு அன்று அறிவித்ததுமே, பலரும் அததனை வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.. அப்போது, அன்றைய தினமே இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருநத்ர் கவிஞர் வைரமுத்து.. இதுகுறித்து பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார்..
அதில், "சொன்னதைச் செய்தார் முதல்வர். உரிமைத்தொகை அறிவித்துவிட்டார். சுயமரியாதையின் மறுபெயர் பணம், சுதந்திரத்தின் மறுபெயர் பணம் ஒரே அறிவிப்பில் பெண்களின் சுதந்திரம் சுயமரியாதை இரண்டுக்குமம் பெருமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துவோம் முதல்வரை போகப் போக இதை இந்தியா பின்பற்றும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
வைரமுத்து அன்று சொன்னதைபோலவே, மகளிர் உரிமைத்திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதுடன், தமிழக அரசை பின்தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா அரசுகள், இந்த மகளிர் உரிமைத்திட்டத்தை செயல்படுத்தியும் வருகின்றன. விரைவில் மகாராஷ்டிரா அரசும் இதே திட்டத்தை செயல்படுத்த போகிறது. அந்தஅளவுக்கு மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக, தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவடைந்து வருகிறது.
எனினும், மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் எண்ணிகையை அதிகரிக்க வேண்டும், தகுதியுள்ள பெண்களை தவிர்த்து அனைவருக்குமே உரிமைத்தொகை கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், கவிப்பேரரசு வைரமுத்துவும் தமிழக அரசு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.. இதுகுறித்து, வழக்கம்போல, கவிதை வடிவிலேயே தன்னுடையை வேண்டுகோளை பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகைக்கு நிகராகவேனும் எழுத்தாளர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
"இலக்கியத்திற்கு, இலக்கியவாதிகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிப்பதில்லை, சிற்றிதழ்கள் குறைந்துவிட்டன, வணிகப் பத்திரிக்கைகளில் இலக்கியத்திற்கான இடம் குறைந்து வருகிறது, சமூக ஊடகங்களிலும் எழுத்தாளர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை, புத்தகங்களை அச்சிட்டு பணம் பார்ப்பது லாபம் தரக்கூடியதாக இல்லை.
இலக்கிய பரிசுகளும் எழுத்தாளர்கள் இறந்த பின்னர் தான் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர்கள் அன்றாட வாழ்க்கையை கழிப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அரசு நூலகங்களுக்கு பெருந்தொகை ஒதுக்கி புத்தகங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். எழுத்து, வாசிப்பு, பேச்சு ஆகியவற்றை பள்ளிகளிலேயே வளர்த்தெடுக்க வேண்டும்" என்றெல்லாம் தன்னுடைய கவிதை வடிவத்திலேயே கோரிக்கையை பதிவிட்டிருக்கிறார் வைரமுத்து.
அந்த பதிவு இதுதான்:
ஓர்
இலக்கியக் கவலையை
இவ்விடத்தில் சுட்டுரைக்கிறேன்
தமிழ்நாட்டுச் சூழலில்
இலக்கியத்தின் உடல்நிலை
ஆரோக்கியமாக இல்லை
அரசியலின்
பேரோசைகளுக்கும்
ஆன்மிகத்தின்
வாத்தியங்களுக்கும் மத்தியில்
இலக்கியத்தின் புல்லாங்குழல்
எடுபடவில்லை
இலக்கியவாதிகளுக்கு ஏற்புடைய
ஊடகங்களும் இல்லை
சிற்றிதழ்கள்
குறைந்தும் மறைந்தும்
இறந்தும் போயின
வணிகப் பத்திரிகைகளின்
இலக்கிய வெளி
இருளேறிக் கிடக்கிறது
சமூக ஊடகங்களின் எதிராடல்
கூட்டாண்மை நிறுவனங்களின்
கலாசாரச் சூறையாடல்
உள்ளூர்ப் பண்பாடுகளின்
உயிர்த் தேய்ப்பு
இவற்றை
எதிர்த்தாட இயலவில்லை
இளைத்த குரல்கொண்ட
எழுத்தாளர்களால்
காகிதச் சந்தைக்கும்
வாசகனுக்கும்
கட்டுபடி ஆகவில்லை
பதிப்பாளனுக்கும்
எழுத்தாளனுக்கும்
இருந்த கணக்குவழக்கு
இப்போது வழக்காக மட்டுமே
உண்மையின்
தீவிர எழுத்துக்காரன்
உயிர்ச்சேதம் சந்திக்கிறான்
இலக்கியப் பரிசுகள்
இரங்கல் கூட்டத்தில்
வழங்கப்படுகின்றன
துய்ப்புக் கலாசாரப் பட்டியலில்
இறுதியில் இருந்து
இப்போது இல்லாமல்
போய்விட்டது புத்தகம்
சிறந்த எழுத்தாளர்களின்
செவ்விலக்கியப் படைப்புத்திறன்
சினிமாவின் வர்த்தகப் பற்களில் அரைபட்டுவிட்டது
காதல் தோல்விக்கு முன்பே
தோல்வியுறுவது
கவிதைத் தொகுப்புதான்
இதை மீட்க வேண்டும்
பெருந்தொகை ஒதுக்கி
அரசு நூலகங்கள்
புத்தகங்கள் கொள்முதல்
செய்ய வேண்டும்
தமிழ்நாட்டுத்
தாய்மார்களுக்கு வழங்கப்படும்
உரிமைத் தொகைக்கு
நிகராகவேனும்
எழுத்தாளர்களுக்கு
உரிமத் தொகை
வழங்கப்பட வேண்டும்
எழுத்து வாசிப்பு பேச்சு
மூன்றும்
பள்ளிகளில் மறுமலர்ச்சி
காணவேண்டும்
வாரா வாரம்
இலக்கிய விழாக்கள்
ஆரவாரம் செய்யவேண்டும்
இலக்கியத்துக்கான இடத்தை
ஊடகங்கள் ஒதுக்க வேண்டும்
இலக்கியம் என்பது
ஒரு நாட்டின்
மொழி வளம் அல்ல;












Click it and Unblock the Notifications