நிவாரணத்தொகை 6000 ரூபாய் தர்றீங்களே.. தமிழக அரசுக்கு போன மற்றொரு கோரிக்கை: ஆட்டோ கட்டணம் வேற ஏறலயே
சென்னை: வெள்ள நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த தொகையை தங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தமிழக அரசுக்கு கிளம்பி உள்ளன.
சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டனர்.. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள்.

ராணுவ வீரர்: அதனால், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. ஆனால், இந்த தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று, சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் நேற்றைய தினம் பொதுநல மனுதாக்கல் செய்திருக்கிறார்.
மற்றொருபுறம், தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த நிவாரணம், தங்களுக்கு போதாது என்றும், கூடுதலான நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. பழுதடைந்த பொருட்களை சீர்செய்வதற்கே, தங்களுக்கு தங்களுக்கு 20 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்கள்: நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், வேலை செய்ய முடியாமல் உள்ளதால், தங்களது 15 நாள்கள் வருமானத்தையும், உடைமைகளையும் இழந்துள்ளதால், 6,000 நிவாரண தொகையை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடும்பத்துக்கு, 15,000 ரூபாயுடன் அத்தியாவசிய பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார்
இதற்குநடுவில், தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உதிரிபாகங்கள்: இதுகுறித்து, அச்சங்கத்தின் செயல் தலைவர், எஸ்.பாலசுப்பிரமணியம் கூறும்போது, "தமிழகத்தில், 10 வருடங்களாகவே, ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை... பெட்ரோல் மற்றும் உதிரிபாகங்களின் விலைகளும், அடுத்தடுத்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால், ஆட்டோ தொழிலை நடத்த முடியாத சூழலில் உள்ளதால், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க கோரி தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறோம்.
இதற்கு நடுவில், புயல், வெள்ள பாதிப்பால், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.. பழுதடைந்துள்ள ஆட்டோக்களை சீரமைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே, ஆட்டோ நல வாரியம் வாயிலாக, ஆட்டோ டிரைவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications