’சனாதனமே’ ஓயலையே ராசா..ஆர்எஸ்எஸ்.- ஐ கோபப்படுத்திய திமுக ஐடிவிங் ‘ட்விட்டர் பதிவு’ - பெரும் சர்ச்சை!
சென்னை: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முழக்கம் எழுப்பிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. அதற்குள் திமுகவின் ஐடிவிங் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவகாரம் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்பாரத செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.எஸ். என்றழக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் 1925-ம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 98 ஆண்டுகளாக பாரத தேசத்தை மீண்டும் உன்ன நிந்லைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாஅடு, தேசபக்தி நிறைந்த இளைஞர்களை உருவாக்கி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். பணி: இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக் காக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேசத்துக்கும் மக்களுக்கும் நெருக்கடி, துன்பம் வரும் போது தன்னலம், சுய விளம்பரம் இல்லாமல் ஓடிச் சென்று துயர் துடைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ்: சீனா, பாகிஸ்தான் நாடுகள் நம் மீது படையெடுத்த போது ராணுவ வீரர்களுக்கு துனை நின்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை 1963-ம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் பங்கேற்க செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு முதற் கொண்டு சுனாமி தாக்குதல் வரை மக்கள் உயிர் ,உடைமைகளை இழந்த போது அவர்களைக் காப்பாற்ற ஓடி சென்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களே.

தாயக சேவையில் ஆர்.எஸ்.எஸ்: கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்ட போது தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மக்களின் மருத்துவம், உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன் களத்தில் நின்று பணியாற்றியதை நாடறியும். இவை தவிர நாடு முழுவதும் 1.50 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சுய விளம்பரமின்றி தாய்நாட்டு சேவை என கடமையாற்றி வருகின்றனர்.

திமுக ஐடி விங் பதிவு: இந்நிலையில் தமிழகத்தை ஆட்சியும் திமுக கட்சியின் ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து உள்நோக்கத்துடன், மக்கள் மத்தியில் கலவரத்தையும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு ஒன்றை 22.09.2023-ல் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இவன் மூலமாக புல் புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்!" என்ற தலைப்பில் ஆதாரமற்ற குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

காந்தி கொலையும் ஆர்.எஸ்.எஸ். மீது பழியும்: 1948-ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது.
நீதிபதி கபூர் கமிஷன்: இது குறித்து விசாரிக்க 1966-ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல். கபூர் கமிஷன், 407 ஆவணங்கள், 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை; இந்த கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராகுல் காந்தி வழக்கு: ஆனால் இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014-ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக உச்சநீதிமன்றட்தில் தொடரப்பட்ட வழக்கில், 25.8.2016-ல் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜூன்சிங் ஆகியோரும் இதேபோல பேசி, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
திமுக ஐடிவிங்குக்கு கடும் கண்டனம்: ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்பும் திமுகவின் ஐடி விங் தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி உள்ளது. ஜனநாயக முறையில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
டெலீட் செய்து மன்னிப்பு கேளுங்க: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐடி விங்கின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ள இந்த்ப் பதிவை உடனே நீக்குவதோடு, திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லயெனில் திமுக ஐடி விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். இயக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை!












Click it and Unblock the Notifications