Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீரமணி யோசனையை ஏற்று சேது சமுத்திரம் திட்டம் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவரப் போகிறதா திமுக அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமர் பாலமே இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஆளும் திமுக அரசு தீர்மானம் கொண்டுவருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மன்னார் வளைகுடா பகுதியில் ராமர் பாலம் இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

மன்னார் வளைகுடாவில் பாக் நீரிணை பகுதியில் கடலை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வதுதான் சேது கால்வாய் திட்டம். வங்க கடலில் துறைமுகங்கள் இடையேயான போக்குவரத்தை எளிதாக்கக் கூடியது. தற்போது இந்திய பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றி பின்னர் சென்னை உள்ளிட்ட வங்க கடல் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

Ruling DMK govt to pass Resolution on Sethu Canal Project in Tamilnadu Assembly?

சேது கால்வாய் திட்டம் என்பது கிபி 1860-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது உருவானது. நாடு விடுதலைக்குப் பின்னரும் நேரு, இந்திரா காலத்திலும் கூட சேதுக் கால்வாய் திட்டம் குறித்து ஆராயப்பட்டது. ஆனால் சேது கால்வாய் அமையும் பகுதியில் கடவுள் ராமர் கட்டியதாக நம்பப்படுகிற இலங்கைக்கான பாலம் இருக்கிறது; அதனை இடிக்கக் கூடாது என சேது கால்வாய் திட்டத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் குரல் கொடுத்தன. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மும்மடங்கு வலுப்படுத்தக் கூடியது சேது கால்வாய் திட்டம் என வாதிடப்பட்டது. ஆனாலும் இந்துத்துவா சக்திகள் புராணங்கள் அடிப்படையில் இதனை எதிர்த்தனர்.

பின்னர் 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். தமிழக முதல்வராக அப்போது மறைந்த மு.கருணாநிதி பதவி வகித்தார். இருந்த போது ரூ 2,427.40 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்காக ரூ831.80 கோடி செலவிடப்பட்ட நிலையில் சேதுக்கால்வாய் திட்டம் நிறுத்தப்பட்டது. இத்திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என ஒரு தரப்பும் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என மற்றொரு தரப்பும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில், மன்னார் வளைகுடாவில் ராமர் பாலம் என்ற ஒன்றே இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசே, ராமர் பாலமே இல்லை என அறிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் சேது கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கலாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டிருந்த அறிக்கையில் இராமன் பாலம் இருந்ததற்கு எவ்வித முகாந்திரமோ, சான்றோ இல்லை என்று கூறிவிட்ட நிலையில், சேதுக் கால்வாய் என்ற தமிழன் கால்வாய் (ஆதித்தனார் வைத்த பெயர் இது) பணியை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்து, சாதிக்க வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்! உண்மையாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்புபவர்கள் ஓரணியில் நிற்காவிட்டாலும், ஓங்கியாவது குரல் எழுப்பட்டும்! இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பயன்மிகு சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டுமென்பதை - வரும் 9.1.2023 இல் தொடங்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் கூட்டத்தில், ஒரு தனித் தீர்மானத்தை - ஒன்றிய அரசினை வற்புறுத்திடும் வகையில், நிறைவேற்றி அனுப்பி வைத்து, அதை மக்கள் மன்றத்திலும் விரிவாக எடுத்து விளக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தார். இதனடிப்படையில் தமிழக அரசு வரும் சட்டசபை கூட்டத் தொடரில் சேதுகால்வாய் திட்டத்துக்கான தீர்மானம் கொண்டுவருமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் சேது கால்வாய் விவகாரம் மீண்டும் உயிர்பெற்றால் அத்தேர்தலில் மிக முக்கியமான ஒன்றாக, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக சேது கால்வாய் திட்டம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+