ஓடும் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த 29 வயது பெண்.. போலீஸ் முன்னிலையிலேயே கணவன் செய்த அந்த பகீர்
சென்னை: தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நந்திகண்டி கிராமத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. காணாமல் போன மனைவியை போலீஸ் உதவியுடன் மீட்டு அழைத்து வரும்போதே, ஓடும் காரில் வைத்து கணவனே இப்படியொரு காரியத்தை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
ஜஹீராபாத் பகுதியைச் சேர்ந்த சித்த ரெட்டி என்பவர் சாட் பிசினஸ் செய்து வருகிறார்.. இவருக்கும் 29 வயது கவிதாவுக்கும் கடந்த 2014 வருடம் கல்யாணம் நடந்தது.

கடந்த சில வருடங்களாகவே இவர்களது குடும்பத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.. இந்த நிலையில் கடந்த மார்ச் 28 தேதி கவிதா திடீர்னு காணாமல் போனார்.. பதறிப்போன சித்த ரெட்டி பல இடங்களில் தேடிப் பார்த்தும் கவிதா கிடைக்கவில்லை.
கவிதா கணவன் தகராறு
அதனால் மார்ச் 29 தேதி ஜஹீராபாத் போலீஸ் ஸ்டேஷனில் சித்த ரெட்டி ஒரு புகார் கொடுத்தார்.. கவிதாவின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவரைத் தேடுவதில் போலீஸாருக்குப் பெரிய சவாலாக இருந்தது..
போலீஸாரின் தொடர் விசாரணையில் ஏப்ரல் 4 தேதி கவிதா ஜட்செர்லா பகுதியில் இருப்பது தெரியவந்தது.. அங்கே போன போலீஸார் கவிதா அங்கிருந்த பவன் குமார் என்பவருடன் தங்கியிருப்பதை உறுதி செய்தார்கள்.. முறைப்படி காணாமல் போன புகாரை முடித்து வைக்கவும் கவிதாவை அடையாளம் காட்டவும் சித்த ரெட்டியை போலீஸார் தங்களோடு கூப்பிட்டு சென்றார்கள்.
காரில் பின் சீட்டில்
கவிதாவை மீட்ட போலீஸார் சித்த ரெட்டி மற்றும் ஒரு போலீஸ் காவலருடன் ஒரு பிரைவேட் காரில் மீண்டும் ஜஹீராபாத் நோக்கிப் பயணம் செய்தார்கள்.. காரின் முன் சீட்டில் போலீஸார் உட்கார்ந்திருக்க, பின் சீட்டில் கவிதாவும் சித்த ரெட்டியும் உட்கார்ந்து வந்தார்கள்..
கார் நந்திகண்டி கிராமம் பக்கம் வந்து கொண்டிருந்தபோது, கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே சித்த ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து கவிதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார்.. முன் சீட்டில் இருந்த காவலர் உடனடியாகத் தடுத்தும் அதற்குள் சித்த ரெட்டி கவிதாவின் கழுத்தில் 2 முறை ஆழமாக வெட்டியிருந்தார்..
கணவன் செய்த அதிர்ச்சி செயல்
ரத்த வெள்ளத்தில் துடித்த கவிதாவை உடனடியாக பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள்.. ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.. இந்தச் சம்பவம் குறித்து சங்காரெட்டி மாவட்ட எஸ்பி பரிதோஷ் பங்கஜ் கூறும்போது, இது முன்கூட்டியே போட்ட மாஸ்டர் பிளான் போல தெரிகிறது.. சித்த ரெட்டி ஏற்கனவே கத்தியை வாங்கி தயார் நிலையில் வைத்திருந்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளது என்கிறார்.
அதேபோல ஜஹீராபாத் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சொல்லும்போது, கவிதா இன்னொரு நபருடன் சென்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.. அடையாளத்திற்காகவே கணவரை கூப்பிட்டு சென்றோம். ஆனாலும் ஒரு குற்றவாளியைப் போல கணவர் செயல்படுவார் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் முன்னிலையிலேயே இந்த கொலை நடந்திருப்பது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.. இப்போது சித்த ரெட்டியை போலீஸார் அரெஸ்ட் செய்து ஜெயிலில் அடைக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.. 10 வருடக் குடும்ப வாழ்க்கை சந்தேகத்தாலும் ஆத்திரத்தாலும் ரத்தக் கறையுடன் முடிவுக்கு வந்தது அந்தப் பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..












Click it and Unblock the Notifications