அதலபாதாளத்தில் ரூபாய் மதிப்பு.. ஆனால் எந்த முயற்சியும் எடுக்கல! நிர்மலா சீதாராமனை சாடிய ப.சிதம்பரம்
சென்னை: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவில் திட்டங்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "அரசாங்கமும் நிதியமைச்சரும் 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையை வாசித்தார்களா என்றே எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை வாசித்திருந்தால், அதை அவர்கள் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, மக்களுக்குப் புரியாத வார்த்தைகளை வழக்கம்போல சுருக்கப் பெயர்களை வீசுவதையே தங்களின் விருப்பமான பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர் என்று தோன்றுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையும் பல துறை வல்லுநர்களும் சுட்டிக்காட்டிய குறைந்தது 10 சவால்களை என்னால் பட்டியலிட முடியும். அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரி விதிப்புகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடு குறித்த நிச்சயமற்ற சூழலும், கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடுகளும் கவலையளிக்கின்றன.
நிதியமைச்சரின் உரையில் இவை எதற்குமே தீர்வு காணப்படவில்லை. எனவே, அந்த உரைக்குக் கிடைத்த கைதட்டல்கள் ஏனோ தானோ என்று இருந்ததிலும், பெரும்பாலான பார்வையாளர்கள் விரைவாகவே அதிலிருந்து விலகியதிலும் ஆச்சரியமில்லை. சன்சத் டிவி ஒளிபரப்பு கூட சில முறை துண்டிக்கப்பட்டது. ஒரு கணக்காளரின் தரத்தைக் கொண்டு அளவிட்டால் கூட, 2025-26 நிதியாண்டின் நிதி மேலாண்மை குறித்த மிக மோசமான அறிக்கையாகவே இது உள்ளது" என்று விமர்சித்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications