அதிருப்தியில் இருந்த ஆத்தூர் ஐ.பெரியசாமிக்கு! ஊரக வளர்ச்சித் துறையால் வீட்டிலுள்ளவர்கள் கூட ஹாப்பி!
சென்னை : தமிழக அமைச்சரவையில் மிகவும் சீனியர், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருமான ஐ பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவரது தரப்பு ஆதரவாளர்களையும் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மருதராஜ் என மாறி மாறி மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும். இவர்தான் அதிமுக என்று யாரையும் சொல்ல முடியாது. பொதுவாகவே தமிழகம் முழுவதும் அதிமுகவில் நிலைமை அப்படித்தான் உள்ளது.
ஆனால் திமுகவை பொருத்தவரை தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் வைத்தது தான் சட்டம் என்ற அளவுக்கு பல ஆண்டு காலம் நிர்வாகிகள் கோலோச்சி வருகின்றனர். துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஐ.பெரியசாமி
அந்த வகையில் தென் மாவட்டங்களில் திமுகவின் முக்கிய முகமாக வலம் வருபவர் ஐ.பெரியசாமி. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அவர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். ஆத்தூர் தொகுதியில் ஆழமாக வேரூன்றி உள்ள அவர் திமுக ஆட்சி காலங்களில் முப்பெரும் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஆத்தூர் மட்டுமல்லாது திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

சீனியர்கள்
திமுக பெரு வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில் பல்வேறு மூத்த அமைச்சர்களுக்கும் ஜூனியர் அமைச்சர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 33 பேர் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதே நேரத்தில் ஜூனியர் அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒதுக்கப்பட்டதோடு கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

கடும் அதிருப்தி
இதனால் பல சீனியர் அமைச்சர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் பலம் பொருந்திய நிர்வாகிகளில் ஒருவரான திண்டுக்கல்லை சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அத்துறையை ஒதுக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என கூறப்பட்டது. அவரது பரிந்துரையின் பேரில் ஜூனியர் சக்கரபாணிக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஒதுக்கப்பட்ட நிலையில் தனக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

பலத்த அதிர்வலைகள்
தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். பல ஜூனியர்கள் தன்னை மதிக்கவில்லை என மனக்குறையும் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முதன்முறையாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் சரியில்லை என பொதுவெளியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
கூட்டுறவு துறை தனக்கு ஒதுக்கப்பட்டதால் மிகவும் அதிருப்தியில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த அமைச்சர் ஐ பெரியசாமிக்கு வருவாய் துறை ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் தற்போது வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரிய கருப்பனின் துறையை ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து இருப்பதாக யூகங்கள் பரவியது. சொன்னது போலவே அதுபோன்ற மாற்றம் தான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. தற்போது 12000 கிராமங்களை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பு ஐ. பெரிசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளதை முகநூல் பதிவுகள் தெரிவித்து வருகின்றன.
-
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications