சகாயத்துடன் இணைகிறாரா விஜய் ? தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்!
Recommended Video
சென்னை: தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ். ஏ சந்திரசேகர் மக்கள் பாதை அமைப்பு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதன் மூலம் விஜய்யும் சகாயமும் தேர்தல் அரசியலில் இணைவாரக்ளா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திவரும், மக்கள் பாதை அமைப்பு சார்பில், சென்னை துரைப்பாக்கத்தில் முப்பெரும் விழா நடந்தது. இந்த அமைப்பில் மாணவரணி, வழக்கறிஞர் அணி என அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் விழாவில் நேர்மையாளர் விருதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிற்கு சகாயம் ஐஏஎஸ் நேற்று வழங்கினார்.

லஞ்சம் கொடுப்பதை
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திரைப்பட இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், லஞ்சம் கொடுப்பதை இளைஞர்கள் நிறுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. இங்கு பணம் கொடுத்தால் தான் அனைத்து வேலைகளும் நடக்கிறது.

அசைக்க முடியும்
தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும. அதிகமான தொகுதிகளில் வென்றால் தான் தமிழகத்தின் நிலையை மாற்ற முடியும். 234 தொகுதிகளில் 180 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த 180 தொகுதிகளிலும் நேர்மையானவர்கள் வென்றால் தான் உங்களால் ஒரு கல்லைக்கூடஅசைக்க முடியும்:" என்றார்.

சந்திரசேகர் அழைப்பு
மக்கள் பாதை அமைப்பு அரசியல் கட்சியாக விரைவில் உருமாறக்கூடும் என்று தெரிகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையை எஸ்ஏ சந்திரசேகர் தேர்தலில் சகாயம் போட்டியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் சகாயமும் விஜய்யும் வரும் தேர்தலில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இணைவார்களா
ஏனெனில் சகாயம் ஐஏஎஸ் மிகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று போற்றப்படுபவர். லஞ்சமில்லாத, ஊழல் இல்லாத அரசு உருவாக வேண்டும் என்று சகாயம் விரும்புகிறார். இதேபோல் தான் நடிகர் விஜய்யும் அடிக்கடி சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். விஜய் விரைவில் அரசியலில் இறங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பின் விழாவில் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் பங்கேற்றுள்ளார். சகாயத்தை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்தும் உள்ளார். எனவே விஜய்யும் சகாயமும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications