அதிமுகவுக்கு வெறும் ஒரே ஒரு எம்பிதானா? மருந்துக்குகூட தாமரை ஒரு இடத்திலும் மலரலையே! ஜோதிடர் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் பாஜகவோ ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் எஸ்.வி.சேகரின் ஜோதிடர் நண்பர் கணித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

திமுக கூட்டணி சார்பில் திமுக 22 இடங்களிலும் (கொமதேக -1) காங்கிரஸ் 9 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா இரு இடங்களிலும் மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டது.
அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக 33 இடங்களிலும் புதிய தமிழகம் 1 இடத்தில் (இரட்டை இலை சின்னத்தில்), தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிட்டது.
பாஜக கூட்டணி சார்பில் பாஜக 19 தொகுதிகளிலும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், சிவநேசன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் சுயேச்சையாக ஓபிஎஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இந்த தேர்தலின் முடிவுகள் வரும் ஜூன்4 ஆம் தேதி வெளியாகிறது. நேற்றுடன் இறுதி கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. அதில் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 0 முதல் 2 இடங்களிலும் பாஜக கூட்டணி 2 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எல்லோரும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள வேளையில் ஒரு வாரம் முன்பு எந்தக்கட்சியையும் சாராத என் நெருங்கிய ஜோதிடர் கணித்துள்ள தமிழ் நாட்டின் கருத்துக் கணிப்பை வெளியிடுகிறேன். இதில் உள்ளபடியே நடந்தால், ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்க்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கணிப்பின் படி தமிழகம், புதுவையில் மொத்தம் 40 இடங்களில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக கூட்டணியை எடுத்து கொண்டால் விருதுநகரில் விஜய பிரபாகரன் வெல்வார் என்றும் அதிமுக போட்டியிட்ட 33 இடங்களில் வெறும் இரு இடங்களில் மட்டும் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நாமக்கல்லில் மட்டும் அதிமுக வெல்வது போல் கணிக்கப்பட்டுள்ளது.
பாஜகவை எடுத்துக் கொண்டால் அந்த கட்சி போட்டியிடும் 19 தமிழக தொகுதிகள், 1 புதுவை தொகுதி என 20 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட தாமரை மலரவே இல்லை. அதன் கூட்டணி கட்சிகளில் கூட தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி மட்டுமே வெல்வார் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாமரை மலரும் என்றும் இந்த முறை தமிழகத்தில் இருந்து இரட்டை இலக்கத்தில் எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் அவரே வெற்றி பெற மாட்டார் என்பதை போல் ஜோதிட கணிப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் ஜூன் 4 ஆம் தேதி வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications