Sabarimala Gold Theft case: நடிகர் ஜெயராமிடம் விசாரணை! சென்னை வீட்டில் எஸ்ஐடி சரமாரி கேள்வி!
சென்னை: சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து அவரிடம் சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அவரது பெயர் சாட்சியாக சேர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தங்கமுலாம் பூசும் செலவை கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உன்னியிடம் 10 மணி நேரம் விசாரணை
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய பின்னர் அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தது. புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராமின் வீட்டில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.
துவார பாலகர்
அதாவது சபரிமலை துவார பாலகரின் சிலையிலிருந்த தங்கத் தகடுகள் சென்னைக்கு பழுது பார்க்க கொண்டு வரப்பட்ட போது நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
40 ஆண்டுகளாக பயணம்
அப்போது ஜெயராம் கூறுகையில், நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருவதால் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரை எனக்கு தெரியும். சபரிமலை கருவறைக்குச் செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால் செழிப்பு உண்டாகும் என உன்னி கிருஷ்ணன போத்தி சொன்னதால்தான் பூஜை செய்தோம் என ஜெயராம் தெரிவித்தார்.
முன்னதாக, ஜெயராம் இல்லத்தில் தங்கத் தகடுகள் வைத்து பூஜை செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. தங்கத் திருட்டுச் செய்திகள் வெளிவந்ததும், தகடுகள் தமது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். முக்கியக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்திக்குச் சட்டபூர்வ ஜாமீன் கிடைக்கும் நிலையில், SIT இன் இந்த நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
90 நாட்கள்
போத்தி கைது செய்யப்பட்ட போதிலும், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு ஜாமீன் பெறும் வாய்ப்பு உருவானது. துவாரபாலகா சிலை மோசடி வழக்கில் அக்டோபர் 17 அன்று SIT ஆல் போத்தி கைது செய்யப்பட்டார். தங்கத் தகடுகள் திருட்டு அவருக்கு எதிரான இரண்டாவது வழக்கு. அவரது கைதை நவம்பர் 3 அன்று பதிவு செய்தனர்.
தங்கத் திருட்டு
தங்கத் திருட்டு வழக்கில் 90 நாட்களுக்குள் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து சிறப்பு புலனாய்வு துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஜெயராம், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்படுவார் என சொல்லப்படுகிறது.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications