கார்த்திகை மாதம் மாலை அணிந்து.. ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 22 விதிகள்! மறக்கவே கூடாது
சென்னை: இந்த ஆண்டு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதியான நாளை முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் மாலை அணியும்போது ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக 22 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவற்றை முறையாக கடைபிடித்தால் போதும் ஐயப்பனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்கின்றார்கள் குருமார்கள்.
ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மனித சஞ்சாரமற்ற அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலையில் அய்யப்பனை ஒருமுறை காண வேண்டும் என்ற எண்ணத்திலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சபரி நோக்கி பயணம் செய்கிறார்கள்.
வெயில், மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாமல், பல நாட்கள் நடைப் பயணம் செய்து தரிசனம் செய்வதே ஐயப்ப பக்தர்களின் முக்கிய ஆன்மிக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் சபரிமலைக்கு செல்லும் ஆன்மிகப் பாதை, ஒரு சாதாரண பயணம் அல்ல..

ஒழுக்கத்தையும், சிந்தனையையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு தவம் என்றே சொல்லலாம். அந்த விரதத்தின் முதல் படி தான் மாலை அணிதல். அதற்குப் பிறகு மாலை கழற்றும் தினம் வரை பக்தர்கள் பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குருநாதர்கள் கூறுவதின்படி, இந்த விதிமுறைகளை சரியாகக் கடைபிடித்தால், சபரிமலைப் பயணம் ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகச்சிறப்பாக அமையும்.
* கார்த்திகை முதல் நாள் மாலை அணியும்போது நல்ல நேரம் நட்சத்திரம் உள்ளிட்டவற்றை பார்க்க தேவையில்லை. இதே போல மார்கழி மாதப் பிறப்பின் முதல் நாளிலும் நாள் நட்சத்திரம் நல்ல நேரம் பார்க்காமல் மாலை அணியலாம்.
* கார்த்திகை முதல் நாளுக்கு பிறகு மாலை அணிபவர்கள் நல்ல நேரம் பார்த்து அணிவது நல்லது.
* தன்னிச்சையாக எப்போதும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய கூடாது. பெற்றோர், மனைவி உள்ளிட்ட சம்மதம் இருந்தால் மட்டுமே மாலை அணிய வேண்டும்.
* மாலை அணிவதற்கு முதல் நாள் மாலையை பாலில் ஊற போட்டு அடுத்த நாள் அணிய வேண்டும். உடைகளையும் தண்ணீரில் நனைத்து உலர்த்திய பிறகு அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் புத்தாடைகளை அணியக் கூடாது.
* கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிய முடியாதவர்கள் அந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம், புதன், சனிக்கிழமைகளில் மாலையை அணிந்து கொள்ளலாம்.
* மாலையை தயார் செய்த பின் கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து பூஜை செய்தபின் 18 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்ற குருநாதர் இடம் கொடுத்து அவரின் சொல் பேச்சு கேட்டு நடந்து மாலை அணிந்து கொள்ள வேண்டும். அவரே குருசாமியாக உங்களை வழிநடத்தி செல்வார்.
* மாலை அணிந்த பின் காலையும் மாலையும் நிச்சயம் குளித்துவிட வேண்டும்.
* பக்தர்கள் நீலம், கருப்பு, பச்சை வண்ண ஆடைகளை அணியலாம். கண்டிப்பாக துண்டு அணிவது அவசியம்.
* ஐயப்பனே உங்கள் எண்ணம் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும். அனைத்திலும் ஐயப்பனே குடி கொண்டிருக்க வேண்டும்.
* முடி வெட்டுவது கூடாது. எண்ணெய் தேய்த்து குளிப்பது, சோப்பு உபயோகித்து குளிப்பது ஆகியவை கூடவே கூடாது.
* வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, அரட்டை, கெட்ட சிந்தனைகளை மனதில் ஏற்றக்கூடாது.
* வெற்றிலை பாக்கு பழக்கமும், பகலில் தூங்குவதும் கூடவே கூடாது.
* இரவிலும் தாங்கள் அணிந்திருக்கும் துண்டை விரித்து மட்டுமே உறங்க வேண்டும்.
* மெத்தை தலையணை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. * சபரிமலையில் காடு மலையை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும். அதனால் செருப்பு அணியவே கூடாது.
* புகை, மது, ஆகியவை கூடாது, மாமிசம் காம சிந்தனை இருக்கக் கூடாது. * மாதவிடாய் ஆன பெண்களுக்கு அருகில் செல்வது வீட்டில் இருப்பது. அவர்களை பார்ப்பது கூடாது.
பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, குழந்தை பிறந்த வீடுகளுக்கு மாலை அணிந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் செல்லக்கூடாது.
* ஆண் பக்தர்களை ஐயப்பா என்றும், பெண் பக்தர்களை மாளிகைபுரத்தம்மன் என்றும், சிறுவர் சிறுமிகளை மணிகண்டா என அழைக்க வேண்டும்.
* ஒரு பக்தர் மற்றொரு பக்தரை சந்திக்கும் போதும் பேசும் முன்பும் பேசிய பின்பும் சுவாமியே சரணம் ஐயப்பா என சொல்ல வேண்டும்.
* வீட்டிலிருந்து யாத்திரை செல்லும் பக்தர்கள் நேரடியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்த பின் நேரே வீட்டுக்கு வரவேண்டும்.
* வீட்டிலிருந்து புறப்படும் பக்தர்கள் முதலில் சபரிமலை கோவிலுக்கு நேரே சென்று தரிசனம் செய்ய வேண்டும். பயணம் முடிந்த பின் பிற கோவில்கள் அல்லது சுற்றுலா இடங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
குருநாதர் வழிகாட்டுதலையும், ஐயப்பனின் ஆசீர்வாதத்தையும் பெற்று இந்த 22 விதிமுறைகளைப் பின்பற்றும் பக்தர்களின் சபரிமலைப் பயணம் முழுமையான அருளோடும் அமைதியோடும் நிறைவடையும் என குருமார்கள் கூறுகின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications