ஒரு காலத்தில் பவர் சென்டர்! சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் சஹாரா.. மாரடைப்பால் காலமானார்!
சென்னை: சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் சஹாரா நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வந்தவர் சுப்ரதா ராய் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சஹாரா சிட் பண்டு திட்டத்தின் முறைகேடு நடந்ததாக இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியின் நீண்ட கால ஸ்பான்சராக சஹாரா இருந்தது குறிப்பிடத்தக்கது.

சஹாரா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுப்ரதா ராய் நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார் என்று அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 75.
சுப்ரதா ராய்க்கு மனைவி ஸ்வப்னா ராய் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சுஷாந்தோ ராய் மற்றும் சீமான்டோ ராய் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
1948 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள அராரியாவில் பிறந்த சுப்ரதா ராய், சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை 1978 ஆம் ஆண்டு தொடங்கினார். வெறும் ₹ 2,000 மூலதனத்தில் தொடங்கி, மிகப்பெரிய உயரங்களை அடைந்த நிறுவனம் ஆகும் இது. ஒரு காலத்தில் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள், எம்பிக்கள்; என்று பலரும் இவரின் அப்பாயிண்ட்மெண்டை பெறுவதற்கு கூட காத்திருந்தனர்.
பீகாரில் தொழில் செய்து வந்த அவரது குடும்பம் பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூருக்கு குடிபெயர்ந்தது. அதைத் தொடர்ந்து, சுப்ரதா ராய் 1990களில் லக்னோவுக்குச் சென்று அந்த நகரத்தை தனது குழுவின் தலைமையகமாக மாற்றினார். அதன்பின் அந்த குளுமை அடைந்த உயரங்கள் ஏராளம்.
மோசடி; இருப்பினும், "சஹாரா சிட் ஃபண்ட் மோசடி" என்று அறியப்படும் ஒரு வழக்கில் சஹாரா நிதி தொடர்பாக சுப்ரதா கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். இதனால் அவரின் நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொண்டது. பங்கு சந்தையிலும் கடுமையான வீழ்ச்சியை அந்த நிறுவனம் சந்தித்தது.
அதன்பின் பொருளாதார ரீதியாக சஹாரா நிறுவனம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. பல்வேறு தொழில்கள் முடங்கின. அரசியல் ரீதியாக அவர்களுக்கு இருந்த ஆதரவும் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. முக்கியமாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்குகள் சஹாராவிற்கு எதிராக திரும்பியதால் அந்த நிறுவனம் மொத்தமாக முடக்கப்பட்டது.
உடல்நிலை பிரச்சனை: இன்னொரு பக்கம் சுப்ரதா ராய் சஹாரா உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவதிப்பட்டு வந்தார். மெட்டாஸ்டேடிக் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த சிக்கல்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்ரதா ராய் இதய சுவாசக் குழாய் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டு கார்டியாக் அரஸ்ட் இறந்ததாக சஹாரா நிறுவனம் அறிக்கையில் கூறி உள்ளது.
அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். அவரது இழப்பு ஒட்டுமொத்த சஹாரா இந்தியா நிறுவனத்திற்கும் மிகப்பெரிய ஆழமான இழப்பு என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வந்த சுப்ரதா ராய் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதற்கு நாடு முழுக்க பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications