3ஆம் தேதி ஆச்சு.. இன்னும் சம்பளவே வரலையே! அதிர்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்! இது தான் காரணமாம்!
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என சொல்லப்பட்ட நிலையில், உறுதியளிப்புதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி தரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 50 சதவீத ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்தன. இந்நிலையில், அரசு தரப்புடன் நடந்த பேச்சு வார்த்தைகள் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், டிஏபிஎஸ் எனப்படும் உறிதியளிப்பு ஓய்வூதியம் அறிமுகமாகியுள்ளது
இந்த நிலையில் அரசு ஊழியர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் ஓய்வூதியம் திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 சதவீத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் எட்டாயத்திற்கு மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளும், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சம்பளம் தாமதம்
ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 31ம் தேதிகளில் அவர்களுக்கு சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் மூன்றாம் தேதி ஆகியும் இதுவரை ஏராளமான அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மாத இறுதியிலேயே சம்பளம் வங்கி கணக்குகளில் வரவைக்கப்படும் நிலையில், தற்போது பள்ளிகள் இருந்து பில் சமர்ப்பிக்கப்பட்டும் ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர்," ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில் எங்களுக்கு எப்போதும் ஊதியம் வரவு வைக்கப்பட்டு விடும். எப்போதாவது அரிதாக ஒன்று அல்லது இரண்டாம் தேதி ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்தி விடுவார்கள். ஆனால் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி ஆகியும் இன்னும் பலருக்கு சம்பளம் வர வைக்கப்படவில்லை. எதனா சம்பளத்தை கிரெடிட் செய்யவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் பிரச்சனை
அரசு ஊழியர்களுக்கு அவர்களது மாத ஊதியம் கருவூல பணப்பரிவர்த்தனை இணையதளமான ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் மூலம் வழங்கப்படுகிறது. தற்போது அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சம்பள பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் ஊதியம் வரவு வைக்கப்படாமல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசுக்கு கோரிக்கை
புத்தாண்டு செலவை சமாளிக்க முடியாமல் ஏராளமான அரசு பள்ளி ஆசிரியர்கள் திணறிவரும் நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையும் வர இருக்கிறது. ஆனால் தற்போது வரை ஊதியம் வர வைக்கப்படவில்லை. இதனால் வாடகை வீடு உள்ளிட்டவற்றில் குடியிருக்கும் அரசு ஆசிரியர்கள் வாடகை செலுத்தக்கூட முடியாத நிலை இருக்கிறது. எனவே, உடனடியாக அவர்களது வங்கி கணக்குகளில் ஊதியத்தை வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications