தங்கமான அறிவிப்பு.. மலிவு விலையில் தங்கம்.. தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை.. இன்றே கடைசி
சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்ட தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை இன்றே கடைசி நாளாகும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து, கடந்த 2015-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் இந்த தங்கப்பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond scheme - SGB).

தங்கப்பத்திரம்: இந்த திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில், அதாவது நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெற முடியும். அதுமட்டுமல்ல, தங்கத்தை பொருள் வடிவில் வைத்திருந்தால், அதனை திருடு போகாமல் பாதுக்காக்க வேண்டியிருக்கிறது.. அதனால், தங்கத்தை ஆவண வடிவில் இப்படி பாதுகாப்புது மிக எளிதாகவும் இருக்கிறது.
தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின்கீழ், யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.. இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.6271 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம்.
தபால் நிலையங்கள்: முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தங்கத்தில் முதலீடு: அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6263 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். பொது மக்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்கப்பத்திரம்: அந்தவகையில், இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் இன்றே கடைசி நாளாகும்.
என்ன செய்ய வேண்டும்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் கட்டாயமாக தேவைப்படும். பிறகு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகணக்கு புத்தகத்தின் முதல்பக்க ஜெராக்ஸ், இவைகளை கொண்டு, தங்கப் பத்திரத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த நிதியாண்டின் கடைசி தங்கப் பத்திர விற்பனை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications