பேசிட்டே இருந்தார் முருகேசன்.. சரமாரி அடி, மரணம்.. வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலேயே.. கைதான எஸ்.ஐ
ஆத்தூர் முருகேசனை போலீசார் அடித்து கொன்றார்கள் என கூறப்படுகிறது
சேலம்: சேலம் பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயி முருகேசனை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயியை தாக்கிய காவலர் முருகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.... போலீஸ் தாக்குதல் நடத்திய சிசிடிவி வீடியோ வெளியான சில மணி நேரத்தில் உதவி ஆய்வாளர், காவலர் இருவரும் கைதாகி உள்ளனர்.
Recommended Video
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.. ஆனால், கொங்கு பகுதியில் குறிப்பாக, கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் அவ்வளவாக அறிவிக்கப்படவில்லை... அதனால் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.
இதனால், மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதால், குடிமகன்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

டாஸ்மாக்
அப்படித்தான், சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் திறக்கப்படாததால், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு சென்று, மது பாட்டில்களை குடிமகன்கள் வாங்கி வருகின்றனர்.. இவர்கள் மதுபாட்டில்களை கடத்தி கொண்டும் வந்துவிடுவதாக கூறப்படுகிறது.. அதனால், போலீசார் செக்போஸ்ட்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆத்தூர்
அப்படித்தான், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதி அருகே பாப்பநாய்க்கன்பட்டி என்ற ஊர் உள்ளது... இந்த வழியாகத்தான், தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்ல முடியும்.. அதனால், இங்குள்ள செக்போஸ்டில் போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணை
அப்போது 3 பேர் பைக்கில் வந்தனர்.. அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், 3 பேருமே போதையில் இருந்தது தெரியவந்தது.. அத்துடன் மதுபாட்டில்களையும் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. இதுதொடர்பாக போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.. இந்த தகராறு ஒருகட்டத்தில் ஓவராகிவிடவும், போலீசார் அவர்களை லத்தியால் தாக்கி உள்ளனர்.. இதில் அந்த 3 பேரில் ஒருவரான முருகேசன் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது..

முருகேசன்
முருகேசனுக்கு 45 வயதாகிறது.. இடையப்பட்டியை சேர்ந்த விவசாய கூலி.. போலீசார் அடித்ததில் பின்பக்கமாக சரிந்து விழுந்ததில் பின்மண்டையில் ரத்தம் கொட்டி காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அங்கிருந்தோர் பதறிபோய், முருகேசனை வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கும், பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அழைத்து சென்றனர்.. ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முருகேசனை காப்பாற்ற முடியவில்லை..

பரபரப்பு
பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. இறந்துபோன முருகேசனுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதையடுத்து போலீசாரும் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அந்த செக்போஸ்ட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்..

கைது
உறவினர்களின் இந்த கொந்தளிப்பினை அடுத்து, போலீசார் இது தொடர்பான விசாரணையை முடுக்கினர்.. இறுதியில், முருகேசனை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயியை தாக்கிய காவலர் முருகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.... போலீஸ் தாக்குதல் நடத்திய சிசிடிவி வீடியோ வெளியான சில மணி நேரத்தில் உதவி ஆய்வாளர், காவலர் இருவரும் கைதாகி உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications