பள்ளி கல்வி.. தமிழகத்திற்கான ரூ.2,152 கோடி நிதி.. மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பு?
சென்னை: 'சமக்ர சிக் ஷா அபியான்' என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்மொழி கொள்கையை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவரும் நிலையில், பிஎம்ஸ்ரீ கல்வி திட்டத்தில் இந்த விதியை ஏற்று இணைந்தால் மட்டுமே நிதி என்பதில் மத்திய அரசு கறாராக இருக்கிறது. இது தான் தற்போதைய சிக்கலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சமக்ரா சிக்ஷா அபியான் (SSA) என்ற பெயரில் மத்திய அரசு நாடு முழுவதும் கல்வித்தரத்தை உயர்த்துவது, கல்விக்கு தேவையான வசதிகள் வழங்குவதற்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியில் சம வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உயர்ந்த கல்வி வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். குறிப்பிட்டு சொல்வது என்றால் இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கான உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் ஆகும்.

'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய-மாநில அரசுகள் 60:40 சதவீதம் அடிப்படையில் நிதியை ஒதுக்கி பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கு கல்வி உதவி, கல்வியில் சமத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். இதில் மத்திய அரசு 60 சதவீதம் நிதியினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும். மொத்தம் நான்கு தவணையாக நிதியை விடுவிக்கும். மீதி உள்ள 40 சதவீதம் நிதியை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு 2016-17-ம் ஆண்டு ரூ.2 ஆயிரத்து 656 கோடி வழங்கப்பட்டது. இதில் மத்திய அரசு 60 சதவீதம் நிதியாக ரூ.1,593 கோடியையும், மாநில அரசு 40 சதவீதம் நிதியாக ரூ.1,063 கோடியையும் ஒதுக்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக ரூ.3 ஆயிரத்து 586 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசு தன் பங்காக ரூ.2 ஆயிரத்து 152 கோடியும், மாநில அரசு ரூ.1,434 கோடியையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்து. மத்திய அரசு தன்னுடைய பங்கு நிதியை 4 தவணைகளாக பிரித்து வழங்குவது நடைமுறையாகும். ஆனால் இந்த முறை வழங்கவில்லை..
இந்த ஆண்டுக்கான முதல் தவணைத் தொகை வழங்குவதற்கு முன்னதாக 'பி.எம்.ஸ்ரீ' பள்ளித்திட்டத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இணைய மத்திய அரசு, மாநில அரசிடம் வலியுறுத்தியாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை ஏற்க ஆரம்பத்தில் இருந்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி உள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தை ஏற்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டியது வரும். அதனால் பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்ட ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்து போடவில்லை. இதனால் மத்திய அரசு தன் பங்கு நிதியான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தராமல் நிறுத்தியது. பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் இணைய கையெழுத்து போட்டுவிட்டு நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டன.
ஆனால் தமிழ்நாடு அரசு பல முறை மத்திய அரசை வலியுறுத்தியது. முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்ற போது, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் நிதியை வழங்கிட வலியுறுத்தி இருந்தார். ஆனாலும் மத்திய அரசு நிதியை விடுவிக்கவே இல்லை. இதனிடையே கல்வியாண்டு தொடக்கத்தில் ஒதுக்கப்பட்ட இந்த நிதி, இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த கல்வியாண்டுக்கான நிதியை ஒதுக்குவது தொடர்பாக பேசுவதற்காக ஒவ்வொரு மாநில அரசு அதிகாரிகளையும் மத்திய அரசு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 2024-25-ம் கல்வியாண்டில் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக ஒதுக்கிய ரூ.2,152 கோடியை, கல்வியாண்டு நிறைவடைய உள்ளதால், அந்த நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதாக தகவல்ககள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் சேர மறுத்ததால் பிற மாநிலங்களுக்கு அந்த நிதியை மத்திய அரசு வழங்கி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் விளக்கம் அளித்தால் தான் மட்டுமே என்ன நடக்கிறது.. என்ன நடந்தது என்பது தெரியவரும்.
-
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications