சனாதன தர்மம் பிற மதங்களுக்கு எதிரியல்ல.. தேர்தல் வந்தால் திமுக என்ன செய்யும் தெரியுமா? அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதன தர்மம் பிற மதங்களுக்கு எதிரியல்ல. கடவுளை நம்பாதவர்கள் கடவுளை நம்புவர்களை பற்றி தவறாகப் பேசக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும் கலந்து கொண்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

Sanatana Dharma is not an enemy of any religion: Tamil Nadu BJP President Annamalai

சனாதன தர்மம் பிற மதங்களுக்கு எதிரியல்ல. கடவுளை நம்பாதவர்கள் கடவுளை நம்புவர்களை பற்றி தவறாகப் பேசக்கூடாது. பெண்கள் உடன் கட்டை ஏறுவது என்பது சனாதன தர்மத்தில் சொல்லாத ஒன்று. சனாதன தர்மத்தை பொறுத்தவரை கோட்பாடு கிடையாது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அறிவுரை கிடையாது. யார் வேண்டுமானாலும் நம்முடைய இயற்கையின் நியையதிக்கு உட்பட்டு வாழலாம் என்பது சனதான தர்மம்.

சனாதன தர்மத்தில் இருக்கும் சிறு சிறு குற்றங்கள் மனிதர்கள் கொண்டு வந்தார்கள். அந்த மனிதர்கள் கொண்டு வரும்போது விவேகானந்தர் வந்தார்.. நம்முடைய மத குருமார்கள் இதை சரி செய்தார்கள். எத்தனை நாளைக்கு தமிழ்நாட்டில் இப்படி இந்துக்களை கொச்சைப்படுத்தி இப்படியே நீங்கள் பேசுவீர்கள். திரும்ப இதுபோல எழுச்சி மிக்க மக்கள் கேள்வி கேட்டால் திமுக கைவசம் ஒரு பதிலை கையில் வைத்து இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஆண்டு சனாதன தர்மத்தை ஒழிப்போம். இரண்டாவது ஆண்டு சனாதன தர்மத்தை வேரறுப்போம். மூன்றாவது ஆண்டு சனாதன தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம். நான்காவது ஆண்டு எங்கள் கட்சியில் 90 சதவிகிதம் இந்துக்கள்.. 5- ஆம் ஆண்டு வேலை தூக்கிவிட்டு வீர வேல் வெற்றி வேல்.. இதை 25 ஆண்டுகளாக தமிழகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது. சனதான தர்மத்தை வைத்து ஒரு தேர்தலை நடத்தலாம்.

சனாதன தர்மத்தை வேரறுப்போம் என திமுக சொல்லட்டும். நாங்கள் சனாதன தர்மத்தையும் இந்து தர்மத்தையும் போற்றி பாதுகாப்போம் என்று சொல்லுவோம். வாங்க... இதை சொன்ன பிறகு திமுக அறிக்கை கொடுத்து விட்டு தப்பிக்க பார்க்கிறது. திமுக புரிந்து கொள்ள வேண்டும். இது பழைய தமிழகம் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் கோயிலுக்கு போகிறார்கள். எல்லா மதத்தையும் சமமாக பார்க்கிறார்கள்.

யாரும் யாருக்கும் எதிரியல்ல. தமிழகத்தில் திமுக வந்த பிறகுதான் சாதி அரசியல் வந்தது. இதை நாங்க கொண்டு வந்தோமா... திராவிட இயக்கம் என்று சொல்லப்படும் திமுக வந்த பிறகு தமிழகத்தில் ஜாதி அரசியலை கொண்டு வந்தீர்கள். இதன் விளைவு என்ன? தென் தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் 23 கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தை ஜாதிக்கலவர பூமியாக மாற்றியதுதான் திமுகவின் சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+