சாதி கொடுமைக்கு வர்ணாசிரமம் காரணமா? சனாதனம் ஒழுக்கத்தை தான் குறிக்கிறது - ஐகோர்ட் நீதிபதி கருத்து
சென்னை: சென்னை: சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, ஆ ராசா எம்பி ஆகியோருக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், ‛‛நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு கடந்த நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டது. அதனால் சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமத்த பழி கூற முடியுமா? சனாதனம் என்பது ஒழுக்க நெறியை தான் குறிக்கிறது'' என கருத்து தெரிவித்தார்.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில். வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அதேபோல் தான் சனாதனம்.'' என்றார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு எதிராக தான் பாஜகவினர் கொந்தளித்தனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது வெளிமாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமின்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு மற்றும் தொடர்ந்து சானாதானத்தை ஒழிக்க வேண்டும் மேடைகளில் பேசி வரும் ஆ ராசா ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ -வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்ற போதும், மனுதாரர் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்குகளை முடித்து வைத்தார். அதாவத வழக்குகளில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்திய அரசியல் சட்டமும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், மக்கள் பிரதிநிதிகள் தகுதியிழப்பு ஆகும் எனக் கூறிய நீதிபதி, சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் தண்டனை ஏதும் விதிக்கப்படாத நிலையில், முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் அடிப்படையில், எந்த தகுதியில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்கும்படி உத்தரவிட முடியாது. மனுதாரர்கள் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.
இந்த வேளையில் நீதிபதி அனிதா சுமந்த் முக்கிய கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், ‛‛அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும். அந்த கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களையே தெரிவிக்க வேண்டும்.
பொது இடங்களில் அமைச்சர்கள், எம்பிக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் உண்மை விவரங்களின் அடிப்படையில் துல்லியமாக இருக்க வேண்டும். எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத முடியாது.
சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதை பொருத்தவரை, இந்துத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது. சனாதனம் என்பது அழிவற்ற, நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால், சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறானது. நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டது. அப்படியிக்க, சாதிய கொடுமைகளுக்க வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சமூகம் சுமுகமாக செயல்பட உருவாக்கப்பட்டது.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications