“வொர்த் இல்லாத என் வாழ்க்கை?” - உடைந்த சங்கீதா.. இனி அமைதி காப்பதில் அர்த்தமில்லை.. வருது அணுகுண்டு!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'புயலைக் கிளப்பும்' என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழா, இப்போது ஒரு குடும்பப் புயலாக உருவெடுத்திருக்கிறது. "சங்கீதா விவகாரம் ஒரு வொர்த்தே அல்ல; அதை பெரிதுபடுத்த வேண்டாம்" என விஜய் உதிர்த்த அந்த ஒற்றை வரி, இப்போது பனையூர் முதல் கோட்டை வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியப்படுத்திய 'தளபதி'!
நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் உற்சாகமாகப் பங்கேற்ற விஜய், மேடையில் பேசும்போது தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ அந்த வெடியைப் போட்டார். கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் 'ஹாட் டாபிக்'காக இருக்கும் தனது குடும்ப விவகாரம் குறித்துப் பேசிய அவர், "சில விஷயங்கள் விவாதிக்கத் தகுதியற்றவை. அதில் கவனம் செலுத்தாமல் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.. சில விஷயம் எல்லாம் வொர்த்தே இல்லை.. நீங்க அதை நினைச்சு ஹர்ட் ஆகாதீங்க.. நான் பார்த்துக்கிறேன்" எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
விஜய்க்கு இது 'அரசியல் முதிர்ச்சி'யாக இருக்கலாம். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக நிழலாய் உடனிருந்த சங்கீதாவிற்கு இது 'அவமதிப்பு' என்கிறார் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
சங்கீதாவின் 'சைலண்ட்' ஆக்ரோஷம்!
"யாரோ ஒரு மூன்றாவது நபர் பேசுவதைப் போல, 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையை 'தகுதியற்ற விஷயம்' என எப்படிச் சொல்லலாம்?" - இதுதான் இப்போது சங்கீதா தரப்பிலிருந்து எழும் குமுறல். இதுவரை எதற்கும் வாய் திறக்காமல், லண்டனும் சென்னைக்கும் இடையே அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்த சங்கீதா, விஜய்யின் இந்தப் பேச்சால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக கடுமையாக அவமானப்படுத்தப்பட்டதாக.. முழுமையாக குடும்பத்தை அவர் அசிங்கப்படுத்தியதாக உணர்கிறார் என்று கூறப்படுகிறது.
அவர் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர வைக்கின்றன:
அவமதிப்பு: இத்தனை கால உழைப்பையும், அர்ப்பணிப்பையும் ஒரு பொது மேடையில் அற்பமான விஷயமாகச் சித்தரித்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
கடும் பதிலடி: "இனி அமைதி காப்பதில் அர்த்தமில்லை" என முடிவெடுத்திருக்கும் சங்கீதா, விஜய்யின் அரசியல் பிம்பத்திற்குப் பின்னால் இருக்கும் 'மறுபக்கத்தை' வெளிச்சம் போடத் தயாராகி வருகிறாராம்.
விரைவில் அதிரடி 'பிரஸ் மீட்'?
அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்திருக்கும் விஜய்க்கு, சங்கீதா தரப்பிலிருந்து வரப்போகும் அந்தப் 'பதில்' நிச்சயம் ஒரு சவாலாகத்தான் இருக்கும். மிக விரைவில் ஒரு காரசாரமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த சங்கீதா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. அதில், குடும்பப் பிரச்னை மட்டுமன்றி, கட்சியின் பின்னணியில் நடக்கும் சில முக்கிய விஷயங்களையும் அவர் உடைக்கக்கூடும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். அந்த நடிகை விஜய் வாழ்க்கையை ஆக்கிரமித்தது எப்படி என்றும் சங்கீதா சொல்லப்போகிறாராம்.
"ஒரு பெண்ணாக, மனைவியாக சங்கீதாவுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதை கூட அந்தப் பேச்சில் இல்லை" என ஆதங்கப்படுகிறார்கள் லண்டன் உறவினர்கள்.
அரசியலில் எத்தனையோ சவால்களை விஜய் சந்திக்க நேரிடும். ஆனால், வீட்டுக்குள்ளிருந்து கிளம்பும் இந்தப் போராட்டம், அவரது 'வெற்றி'ப் பயணத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications