சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்டு.. உள்ளே செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!
சென்னை: பணி நிரந்தரம் கோரி சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை அரசு தரப்புடன் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாசலில் தூய்மைப் பணியாளர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அவர்கள் அவ்வப்போது திடீரென போராட்டத்தில் குதித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு நடத்தப்பட்டதை போன்று மீண்டும் ரிப்பன் மாளிகை வளாகப் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 28 ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை நடத்தினர். கடந்த 30 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே போராட்டத்தில் ஈடுபட தூய்மைப் பணியாளர்கள் பலர் திரண்டு வந்தனர். அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணா அறிவாலயம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம், ரிப்பன் மாளிகை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு இன்று (ஜனவரி 2) போராட்டம் நடத்தினர்.
வீட்டுக்குள் நுழையும் முயன்றவர்களை போல சார் பேரி கார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களை அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications