‘வாக்குறுதி கொடுத்தால் தான் அரசு செய்யுமா’ – துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் சண்முகம் கேள்வி
சென்னை: சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணி பொறுப்பை, தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் போராடி வரும் நிலையில், அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அப்போது அமைச்சர் சேகர் பாபு, திமுக தேர்தல் வாக்குறுதியில் எதுவும் சொல்லவில்லை என்றதுடன் துப்புரவுப் பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மார்க்சிஸ்ம் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ரிப்பன் மாளிகையில் போராடி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "பல வருடங்களாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாங்கள் போராட்ட களத்துக்கு வந்துள்ளோம். அரசுத்தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முன்னெடுப்போம். மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே தாராளமயமாக்கல் கொள்கையை கட்டமைத்துள்ளனர்.
அனைத்து துறைகளிலும் தனியார்மயம், ஒப்பந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் தனியார்மயம், ஒப்பந்தம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவை கடைபிடிக்கப்படுகின்றன. இதற்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது. அந்த வகையில் இதில் எந்தளவுக்கு தீர்வு காண முடியுமோ, அதற்கான முயற்சியை இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க தலைவர்களுடன் இணைந்து மேற்கொள்வோம்." என்றார்.
அப்போது, "போராட்டம் 10வது நாளை எட்டியுள்ளது. தமிழக அரசியல் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?' என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சண்முகம், "சாம்சங் விவகாரத்தில் 36 நாட்களுக்கு மேல் நாங்கள் போராடினோம். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை தீர்ப்பதற்கு அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
நீண்ட போராட்டம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீடு ஆகியவற்றுக்கு பிறகு தான் சாம்சங் விவகாரத்தில் நியாயமான தீர்வு எட்டப்பட்டது. அந்த வகையில் துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கையும் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது." என்றார்.
அப்போது, "அமைச்சர் சேகர் பாபு துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை தொடர்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை" என்று கூறுகிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சண்முகம், "தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை மட்டும் தான் ஒரு அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வாக்குறுதி கொடுத்துள்ளார்களா என்பது அப்பாற்பட்ட விஷயம். தற்போது போராடும் துப்புரவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இதுகுறித்து தொழிற்சங்கம், அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்." என்றார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications