மிரட்டலான DRS காம்போ.. உலக கோப்பையால் CSK-க்கு அடித்த அதிர்ஷ்டம்! இனி தோனி படையை நிறுத்த முடியாது
சென்னை: உலக கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோர் பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இவர்களோடு ருதுராஜும் சென்னை அணியில் இருப்பது சிஎஸ்கேக்கு செம பெரிய பிளஸ் பாயிண்டு. இந்த SRS காம்போ தான் சிஎஸ்கேவுக்கு துருப்பு சீட்டாக இருக்கும் எனத் தெரிகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது. 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாகக் கோப்பையை வென்றது. சொந்த மண்ணில் கோப்பையை வென்ற அணி, முதல் முறையாகக் கோப்பையைத் தக்கவைத்த அணி எனப் பல சாதனைகளைப் படைத்தது.

டி20 டீம்
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே அசுர பாஃர்மில் இருப்பது சிஎஸ்கே அணிக்கு நல்ல செய்தி. இவர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சேர்ந்து கொண்டால் சிஎஸ்கே அணியை யாராலும் தடுத்துக் கூட நிறுத்த முடியாது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ஆகியோரின் மிரட்டலான கூட்டணி சிஎஸ்கே அணிக்கு பிளஸ் பாயிண்டாக அமையும். ஆறாவது வெற்றியையும் நமக்குப் பெற்றுத் தரும். 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்க உள்ள இந்த அதிரடி பேட்டிங் கூட்டணி, மற்ற ஐபிஎல் அணிகளுக்குக் கலக்கத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சஞ்சு சாம்சன்
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இந்த தொடரில் சஞ்சுவின் கம்பேக் மிரட்டலானது. அணியில் வாய்ப்பு கிடைத்தும் முதலில் சோபிக்காததால் அவர் நீக்கப்பட்டார். டி20 உலக கோப்பையில் முதல் இரு போட்டிகளில் முறையே 22 மற்றும் 24 ரன்களை மட்டுமே எடுத்தார். அதன் பிறகு கம்பேக் கொடுத்த சஞ்சு வெளுத்து வாங்கினார்.
சூப்பர் 8 சுற்றில்.. வெஸ்ட் இண்டீஸ் உடனான கிட்டத்தட்ட நாக்அவுட் போட்டியில் 50 பந்துகளில் 97 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 42 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார். நேற்றைய இறுதிப் போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும் கூட தொடர் நாயகன் விருதும் பெற்றார். அந்தளவுக்கு அவரது ஆட்டம் டாப்பாக இருந்தது. அவர் இதை ஃபார்மை சிஎஸ்கே அணிக்குக் கொண்டு வந்தால் ஓபனிங் பஞ்சாயத்து இருக்காது!
ஷிவம் துபே
அடுத்து ஷிவம் துபே.. ஹல்க் பாணியில் இறங்கினால் அடித்துப் பிளக்க வேண்டும் என்பதே இவரது மிஷன். உலகக் கோப்பை தொடர் முழுக்க இவர் சீரான ஆட்டத்தை ஆடி வந்துள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 66 ரன்களை எடுத்தார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8, இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலும் அவர் கலக்கினார். நேற்றைய போட்டியிலும் அவர் 8 பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.
பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் டிரெண்டான ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்துகிறார். இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் அவர் பவுலிங் செய்துள்ளார். அதில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியைத் தவிர மற்ற 4 போட்டிகளிலும் விக்கெட் எடுத்துள்ளார். இப்படி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஷிவம் துபே நல்ல பார்மில் இருப்பது சிஎஸ்கே அணிக்கு செம பெரிய பிளஸ் பாயிண்டு.!
ருதுராஜ் கெய்க்வாட்
அடுத்து சிஎஸ்கே அணிக்கு எப்போதுமே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட். இவர் உலக கோப்பையில் இல்லை என்றாலும் சிஎஸ்கேவின் தூண் என சொல்லலாம். இவரது பேட்டிங் ஸ்டைல் தடாலடி தாட்புட் என இருக்காது. ஆனால் நேர்த்தியாக ரன்களை குவிப்பார். அதாவது எதிரிகளுக்கே தெரியாமல் எதிரிகளை வீழ்த்துவது போலவே நேர்த்தியான ஆட்டத்தை ஆடுவது ருதுராஜ் ஸ்டைல். தடாலடி வீரர்களுக்கு நடுவே ருதுராஜும் இருப்பது சிஎஸ்கே அணிக்கு ஸ்திரத்தன்மைக்குப் பலமாக இருக்கும்.
இம்மூவரும் இணைந்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை நிறுத்தவே முடியாது. சஞ்சுவின் அதிரடி, ருதுராஜ்ஜின் ஆட்டத்தை உணர்ந்த பேட்டிங், துபேவின் பினிஷிங் இந்த "SRS" கூட்டணி மட்டும் இதேபோல சிஎஸ்கே அணிக்கு ஒர்க் அவுட் ஆகிவிட்டால்... சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications