Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகுமார் நடித்த அயோத்தி: மாதவராஜ் கதையின் பக்கா காப்பியே- எஸ்ராவுக்கு எதிராக திரைக்கதை சங்கர்தாஸ்

அயோத்தி திரைபடத்தின் உண்மை கதை தொடர்பாக சங்கர்தாஸ் வெளியிட்டுள்ள ஆதாரங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படத்தின் கதை யாருடையது என்ற சர்ச்சை ஓயவில்லை. எழுத்தாளர் மாதவராஜ் கதையைத்தான் எஸ்ரா, அயோத்தி படத் தயாரிப்புக்கு எடுத்து கொடுத்துவிட்டு தன்னுடைய கதை என்கிறார் என்பதுதான் பிரச்சனை.

இந்த விவகாரத்தில் அயோத்தி படத்துக்கு முதலில் திரைக்கதை எழுதியதாக கூறும் சங்கர்தாஸ் அளித்துள்ள ஆதாரங்களை தம்முடைய முகநூலில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் மாதவராஜ்.

இது தொடர்பாக மாதவராஜ் பதிவிட்டுள்ளதாவது: "அயோத்தி படத்திற்கு முதலில் திரைக்கதை எழுதியவர் சங்கர் தாஸ். பிறகு வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. "இது எஸ்.ராமகிருஷ்ணனின் கதை" என இரண்டு பக்கக் கதையை இயக்குனர் மந்திரமூர்த்தி, இவரிடம் கொடுத்து திரைக்கதை எழுதச் சொல்லி இருக்கிறார்.

Sankar Das exposes Ayothi Story sotlen from Writer Mathavaraj

அப்படி தன்னிடம் தரப்பட்ட எஸ்.ராவின் கதையை இன்று தன் முகநூல் பக்கத்தில் சங்கர்தாஸ் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளர் செய்கிற காரியமா இது?

2011ல் நான் எழுதியதை

2022ல் அப்படியே ஈயடிச்சான் மாதிரியா காப்பியடித்து இருப்பார்.?

இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் மக்களே!

சட்டென்று பிடிபட்ட ஒரே மாதிரியான எழுத்துக்களை இங்கு பகிர்கிறேன்.

கதை ஒப்பீடு விவரங்கள்:

லக்னோவிற்கு விமானம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர்.நேரடி விமானம் இல்லை என்கிறார்கள்.பாராமவுண்ட் , கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்து விட்டது .இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்ல முடியும் என்கின்றனர். (எஸ்.ரா எழுதியது)

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பாராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். (மாதவராஜ் எழுதியது)

*****
அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்து விடுகிறார்கள்.."மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும் இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது "என்று சொல்லி மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட் பனிரெண்டரைக்குள் வாருங்கள் என அவசரப்படுத்துகிறார்கள்..அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (எஸ்.ரா எழுதியது)

Sankar Das exposes Ayothi Story sotlen from Writer Mathavaraj

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். "மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது" என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். "மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்" என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (மாதவராஜ் எழுதியது )

*****
ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது.அங்கு சென்று விசாரிக்கிறார்கள்.ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று கை விரித்துவிட்டார்கள்.மதுரைக்குள் செல்லவேண்டுமென்றாள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.கதிர் தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான். (எஸ்.ரா எழுதியது )

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது )

*****

தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கி கொண்டிருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலை குலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் (எஸ்.ரா எழுதியது )

மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். (மாதவராஜ் எழுதியது )

*****

தீபாவளி என்பதால் எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய்11000 எனவும் கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.ஷியாம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார் (எஸ்.ரா எழுதியது )

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது )
*****
நீங்களெல்லாம் யார் சார் எங்கிருந்து வந்தீங்க சார்.எங்களுக்கு ஏன் சார் உதவி செய்யனும்.நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலைமை என்ன சார்? (எஸ் ரா எழுதியது )

"நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்" (மாதவராஜ் எழுதியது )

Sankar Das exposes Ayothi Story sotlen from Writer Mathavaraj

*****
இதற்கு மேலும் நடந்த உண்மைச் சம்பவத்தை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என யாரும் உருட்ட வேண்டாம். இவ்வாறு மாதவராஜ் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக எஸ்ரா அளித்துள்ள விளக்கம்:

எனது அயோத்தி திரைப்படக் கதையின் மீது எவர் உரிமை கோரினாலும் அதை நான் உறுதியாக மறுக்கிறேன். நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதினேன். படத்திலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று போடுகிறார்கள். வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறாகள். இவர்களில் சிலர் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி மரணம் அடையும் செய்திகளை அடிக்கடி நாளிதழ்களில் காண முடிகிறது. அப்படி ஒரு வட இந்தியக் குடும்பம் விபத்தில் சிக்கிய தகவல்களை எனக்குத் தந்தவர் மதுரையைச் சேர்ந்த ஒரு நண்பர். அவர் கொடுத்த விரிவான தகவல்களைக் கொண்டே இக்கதையை எழுதினேன்.

அயோத்தி படத்தில் அவருக்கு நன்றி கூறியிருக்கிறார்கள். படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் திரைக்கு ஏற்றபடி மாற்றம் செய்ய விரும்பியபோது, கதையில் நிறைய மாற்றங்கள் செய்து கொடுத்திருக்கிறேன். அது தான் இன்றைய திரைவடிவம். திரைப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி இன்று தனது நேர்காணலில் கதை எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்தது என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறார். வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை வைத்து தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, என் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஒரு கதை என்பது உண்மை, மற்றும் கற்பனையும் இணைந்து படைப்பாளியின் கலைத்திறனால் உருவாவது. இவர்கள் சொல்லும் குற்றசாட்டுகள் போல சாலை விபத்து மற்றும் குற்றச் செய்திகளுக்கு யாரோ உரிமை கோரினால் எந்தப் படைப்பாளராலும் எதையும் எழுத முடியாது. இவ்வாறு எஸ்.ரா எழுதியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+