தூக்குல போடுங்க சார் 4 பேரையும்.. தலைக்கேறிய ரீல்ஸ் மோகம்! திருத்தணி சம்பவத்தால் கோபமான சரத்குமார்!
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒடிசாவை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞரை பட்டாக்கத்தியால் தாக்கி ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வடமாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது கொந்தளித்தவர்கள் இன்று வட மாநில இளைஞருக்கு நேர்ந்த அவலத்தை கண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார்.
மேலும், குற்றவாளிகள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்ற பாரபட்சம் காட்டி அவர்களை சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பாமல், கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்கினால் மட்டுமே மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் எனவும், கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு இளைஞர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்து, அந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரிய செயல்.

திருத்தணி தாக்குதல்
சமூக வலைதள மோகத்தால் மிருகத்தனமாக போக்கிற்கு மனித சமூகம் மாறி வருவது வெட்கக்கேடானது. வட மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டால் கொந்தளிப்பவர்கள், இன்று தமிழகத்தில் வட மாநில இளைஞருக்கு நேர்ந்த அவலம் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவப்பெயரை உண்டாக்கியதை கண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
சரத்குமார்
எந்த மனித உயிரானாலும், மனிதாபிமானத்துடன் பாதுகாப்பான சூழல் அமையப்பெறுவதை உறுதி செய்து மதிக்கப்பட வேண்டும். குடும்ப சூழலுக்காக வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் சென்று பொருளாதாரம் ஈட்டும் இளைஞர்கள் மீது இத்தகைய வன்முறை தாக்குதல் போதை கலாச்சாரத்தால் உருவானது என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
ரீல்ஸ் வீடியோ வன்முறை
எதை வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சமூக குற்றங்களை கூட சாதாரணமாக செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ள சூழலில், மக்கள் மத்தியில் வைரல் ஆக வேண்டும் என்று இப்படி வெறி பிடித்திருக்கிறார்கள். அந்த வெறியை முறியடிக்கவும், சமூக சீர்கேட்டு குற்றத்தின் அடிப்படையான போதை பொருள் ஊடுறுவலை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
மரண தண்டனை கோரிக்கை
மேலும், ரீல்ஸ் மோகம் தலைக்கேறுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு அல்லது பிற நாடுகளில் உள்ளது போல முற்றிலும் தடை செய்திட வேண்டும் அல்லது நெறிமுறைப்படுத்த வேண்டும். பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவித செயலும் ஆபத்து மற்றும் அபத்தமானதே. மேலும், குற்றவாளிகள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்ற பாரபட்சம் காட்டி அவர்களை சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பாமல், கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்கினால் மட்டுமே மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்ற அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications