தம்பி திவாகரன்.. திடீரென போன் போட்ட சசிகலா.. கண்ணீரில் நெகிழ்ந்த மன்னார்குடி குடும்பம்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அண்ணா திராவிட கழக தலைவர் திவாகரனுக்கும் போன் போட்டு சசிகலா நலம் விசாரித்ததால் மன்னார்குடி குடும்ப உறவுகள் நெகிழ்ந்திருக்கின்றனராம்.
தமிழகத்தில் ஆடியோ அரசியலை கையில் எடுத்து அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேசும் ஆடியோதான் இன்றைய அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்.
சசிகலா இந்த ஆடியோக்களை வெளியிடுவதன் மூலம் தன்னுடைய இமேஜை தக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பாகிப் போகும் அதிமுக தலைமை, சசிகலாவுடன் யார் போனில் பேசினாலும் கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

எம்.ஜி.ஆருக்கு அட்வைசர்
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்புமே இல்லை என அதிமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், எம்.ஜி.ஆரே என்னிடம்தான் ஆலோசனை கேட்பார்; எம்.ஜி.ஆர் எப்படி பேசனும் என்பதை எல்லாம் நான்தான் சொன்னேன்.. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டார். எம்.ஜிஆருடனான எனது அரசியல் பயணம் வெளி உலகத்துக்கு தெரியாது என அடித்துவிட்டார் சசிகலா.

திவாகரனுக்கு திடீர் போன்
சசிகலாவின் ஒவ்வொரு ஆடியோவும் அதிமுகவுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தம்பி திவாகரனுக்கு திடீரென போன் போட்டு சசிகலா பேசியிருப்பது மன்னார்குடி குடும்பத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பெருந்தொற்று நோய் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

சசிகலா கண்ணீர்
தற்போது கொரோனா சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி உள்ளார் திவாகரன். இதனால் திவாகரனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் சசிகலா. அக்காவின் குரல் கேட்டு, 'பரவாயில்லை அக்கா...இப்பவாச்சும் இந்த தம்பியின் ஞாபகம் வந்திருக்கிறதே ' என்று திவாகரன் சொல்ல, உடைந்து போய் விட்டாராம் சசிகலா.

திவாகரனுக்கும் அட்வைஸ்
அதன்பிறகு சசிகலாவும் திவாகரனும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் உடல் நலம் சரியாகி விட்டது என்று அலட்சியமாக இருக்காதே, இன்னும் 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள் என்று அட்வைஸ் செய்துள்ளார் சசிகலா.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications