தொடரும் போராட்டம்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்?.. சசிகலா சீராய்வு மனு!
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது.

இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒன்றாக சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை முடக்கியது.
2017 மார்ச் மாதம் அந்த சின்னம் முடக்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன்பின் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரி டிடிவி தினகரன் - சசிகலா தரப்பு வழக்கு தொடுத்தது.
இதன் மீதான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி ஹைகோர்ட்டில் நடந்தது. இரண்டிலும் இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம் என்று இரண்டிலும் தீர்ப்பு வந்தது. இரட்டை இலை சின்னத்தை அதிமுக பயன்படுத்துவது சரிதான், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இந்த சின்னத்தை பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications