நூற்றுக்கணக்கான கார்கள் புடை சூழ.. அதிமுக கொடி கட்டிய காரில்.. சென்னைக்குப் புறப்பட்டார் சசிகலா!
பெங்களூர்: பெங்களூர் தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பச்சை நிற சேலையில் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்னை புறப்பட்டார் சசிகலா.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அதற்கு முன்னதாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றார். கொரோனா தொற்று நீங்கிய நிலையில் அவர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவர் தேவனஹள்ளியில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு தன்னை நேற்று வரை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதிமுக கொடி
அவர் இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். பச்சை நிறத்திலான சேலை அணிந்து கொண்டுள்ளார். அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்ற பின்னர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து தேவனஹள்ளி பண்ணை வீட்டுக்கு சென்ற போது அவர் அதிமுக கொடி பொருத்திய ஜெயலலிதா காரில் சென்றார்.

அதிமுக உறுப்பினர்
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதிமுக உறுப்பினரே இல்லாத சசிகலா எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என அதிமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கும் பதிவு செய்திருந்தனர். இதனால் தமிழகம் வரும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

சென்னை
அதன்படி இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை புறப்பட்டுள்ளார் சசிகலா. அவர் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். வழிநெடுகிலும் தொண்டர்கள் பூசணிக்காய் உடைத்தும் தேங்காய் உடைத்தும் வரவேற்பு அளிக்கிறார்கள்.

சசிகலா
இதற்காக அதிகாலை முதலே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொண்டர்கள் குவிந்தனர். வழியெங்கும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை வழிநடத்த வருகை தரும் சசிகலா என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications