சசிகலா சொல்லியிருக்கலாம்.. எம்ஜிஆர் கேட்டிருக்கலாம்.. ஆனால்.. சொல்கிறார் ரவீந்திரன் துரைசாமி
சென்னை: எம்ஜிஆருடன் சசிகலா பேசியதாக சொல்லும் தகவல் உண்மையாக கூட இருக்கலாம் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில மாதங்களாக அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசி வருவதை காட்டிலும் அவர் நேற்றைய தினம் பேசியது அதிமுக நிர்வாகிகளை கோபமடையச் செய்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமியுடன் சசிகலா உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா மட்டுமில்லை, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் தான் ஆலோசனைகளை கூறி இருப்பதாகவும் அதிமுக தொடர்பாக தன்னிடம் எம்ஜிஆர் கருத்துகளை கேட்பார் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

அஸ்திரங்கள்
இதை அதிமுகவினர் கடுமையாக கண்டித்தனர். பல அஸ்திரங்களை விடுத்தும் அதிமுகவில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை என்பதால் தொண்டர்களை கொந்தளிக்க வைக்கவே எம்ஜிஆர் குறித்து சசிகலா பேசியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஆர்
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில் எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கியதாக சசிகலா கூறியதில் உண்மையும் இருக்கலாம். அதை நாம் மறுக்க முடியாது. சோ தனது துக்ளக் நாளிதழில் " சசிகலா எம்ஜிஆரின் நம்பிக்கைக்கு உரியவர். அந்த அடிப்படையில்தான் ஜெயலலிதாவுடன் இருந்தார்" என குறிப்பிட்டிருந்தார்.

ஆலோசனை
அந்த வகையில் எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை வழங்கியிருக்கலாம். அதில் தனக்கு சரியானதை பொருத்தமானதை எம்ஜிஆர் கேட்டு செயல்பட்டிருக்கலாம். எம்ஜிஆர் மட்டுமில்லை, ஒவ்வொரு தலைவரும் தனக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனைகளை கேட்பதுண்டு. ஆனால் இறுதி முடிவு தலைவர்தான் எடுப்பார்.

சசிகலா
எனவே எம்ஜிஆருக்கு சசிகலா ஆலோசனை வழங்கியதை நாம் மறுக்க முடியாது. ஆனால் அதிமுக பிளவுப்பட்டிருப்பதாக சசிகலா கூறுவது தவறு. தற்போது ஈபிஎஸ் ஓபிஎஸ் எனும் இரட்டை தலைமையில் ஒன்றுபட்டு இருக்கிறது. இரட்டை இலையானது இரட்டை தலைமைக்கு மத்தியில் உள்ளது என்றார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications