இரவு நேரத்தில் உள்ளே வந்த கார்.. விர்ருன்னு அந்த பங்களாவிற்கே போன சசிகலா.. என்னென்னமோ நடக்குதே!
சென்னை: அரசியலில் இருந்து விலகி உள்ள சசிகலா தற்போது கோவில் வழிபாடு, ஆன்மீக பயணம் என்று சுற்ற தொடங்கி உள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்து தமிழக அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அரசியலில் இருந்து வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன் சசிகலா அறிவித்தார்.
அதன்பின் வீட்டை விட்டு வெளியே வராமல் மொத்தமாக வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருந்த சசிகலா இப்போதுதான் வெளியே வர தொடங்கி உள்ளார். தஞ்சாவூருக்கு தனது ஆன்மீக பயணத்தை சசிகலா மேற்கொண்டு உள்ளார்.

தஞ்சாவூர்
நேற்று மாலை தி நகரில் உள்ள இளவரசி வீட்டில் இருந்து கிளம்பி ஆரவாரமில்லாமல் தஞ்சாவூருக்கு சசிகலா வந்தார். சரியாக நேற்று இரவு சசிகலா தஞ்சைக்கு ரீச் ஆனார். தஞ்சை அருளானந்த நகரில் உள்ள தனது கணவர் நடராசனின் வீட்டில் தங்கினார். இங்கு மறைந்த நடராசன் கட்டிய பெரிய வீடு இருக்கிறது.

பங்களா
பங்களா போல இருக்கும் சொகுசு வீடாகும் இது. இங்குதான் சசிகலா அடுத்த சில நாட்களுக்கு தங்க போகிறார். நேற்று இரவு தஞ்சை வந்த சசிகலா இன்று அதிகாலையே விளார் கிராமத்தில் உள்ள அவரது குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பெரிய அளவில் கூட்டத்தோடு உறவினர்கள் பலர் சசிகலா உடன் இருந்தனர்.

பச்சை
உறவினர்கள் பலர் இருந்தாலும் கட்சிக்காரர்கள் யாரும் பெரிய அளவில் இல்லாமல்.. பச்சை புடவையில்.. பெரிதாக ஆரவாரம் இன்றி சசிகலா இந்த வழிபாட்டை நடத்தினார். அதன்பின் மீண்டும் ஓய்வு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றவர் பின் வெளிய வரவில்லை. இன்னும் சில நாட்கள் சசிகலா தஞ்சையில் இருக்க போகிறார்.

என்ன பிளான்
மார்ச் 20ம் தேதி நடராசனின் நினைவு நாள் வருகிறது. விளார் சாலையில் உள்ள நடராசனின் சமாதியில் சசிகலா மரியாதை செலுத்துவதுதான் இந்த பயணத்தின் நோக்கம் . ஆனால் அதற்கு பின்னும் இவர் சில கோவில்களுக்கு செல்ல இருக்கிறார். நேற்று இரவே சசிகலா இருந்த பங்களாவிற்கு சிலர் காரில் வந்து அவரை பார்த்துள்ளனர்..

அரசியல் தலைவர்கள்
ஆனால் இதில் அரசியல் தலைகள் யாரும் இல்லை.. எல்லாம் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இப்படி திடீரென கோவில் கோவிலாக சசிகலா செல்வதற்கு பின் வேறு எதோ காரணம் இருக்கிறது .. எதையோ மனதில் வைத்துதான் சசிகலா இப்படி செய்கிறார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications