திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு.. சைலண்டாய் சம்பவம் செய்த வி.கே.சசிகலா..! ஓ அவருக்குத் தான் இந்த மெசேஜா?
சென்னை: சென்னையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தேர்தலுக்கு பிறகு நிச்சயம் ஒரு மாற்றம் நடக்கும் என பேசியுள்ளது அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியைச் குறிவைத்து தான் அவர் பேசியிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரபல தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட பலரும் காலையிலிருந்து வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
சசிகலா: இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், தன்னை அதிமுக பொதுச் செயலாளர் எனக் கூறி வரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து விரலில் மையிட்டபடி உற்சாகமாக போஸ் கொடுத்த சசிகலா, அங்கிருந்து தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
தப்புக் கணக்கு: முன்னதாக வாக்களித்ததும் செய்தியாளர்களிடம் பேசிய விகே சசிகலா, தேர்தலில் தனது ஜனநாயக கடைமையாற்றியுள்ளதாகவும், மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும்" என பேசியுள்ளார். இது தான் தற்போது அதிமுகவினரிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்தே சசிகலா இப்படி பேசியதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவே முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. தொடர்ந்து அவரது ஆதரவின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த போதும், சிறையில் இருந்த போதும் சிறையில் இருந்து வெளிவந்த போதும் சசிகலாவை அவர் புறக்கணித்தார்.
பலத்த பின்னடைவு: மேலும் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதோடு சிறையை விட்டு அவர் வெளியே வந்த பிறகும் அவரை சந்திக்கவில்லை. இந்த நிலையில் ஆரம்பத்தில் இணக்கமாக இருந்த பன்னீர்செல்வம் தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே கட்சியின் விட்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன் தனி கட்சி ஆரம்பித்து தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். தற்போது இருவருமே பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதிமுக தேர்தலில் பலத்த பின்னடைவை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன.
மீண்டும் இணையும் அதிமுக?: இந்த நிலையில் தான் சசிகலாவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக அதிமுக தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்ற பிறகு அதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. உதாரணத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்ததோடு அதற்கு பிறகு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களுமே அதிமுக தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாகவே அதிமுக மீண்டும் தன் வசம் வரும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் திருந்த வேண்டும் என்பதற்காகவே சசிகலா இப்படி பேசி இருக்கிறார் என்கிறனர் அரசியல் நிபுணர்கள்.











Click it and Unblock the Notifications