நானும் ஜெயலலிதாவும் முக்காடு போட்டுகிட்டு.. திருவான்மியூர் சாலையில் நடந்தே செல்வோம்.. சசிகலா தகவல்
சென்னை: நானும் ஜெயலலிதாவும் திருவான்மியூர் சாலையில் முக்காடு போட்டுக் கொண்டு நடந்தே செல்வோம் என சசிகலா தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தந்தி டிவி அளித்த பேட்டியில் கூறுகையில் வீடியோ கவரேஜ் மூலமாகத்தான் ஜெயலலிதா எனக்கு பழக்கமானார்கள். எங்கள் நிறுவனத்தின் வீடியோக்கள் சிறப்பாக இருந்ததால் என்னை போனில் அழைத்து பாராட்டினார்.
என்னை அவர் வீட்டிற்கு அழைத்ததன் பேரில் நான் அங்கு சென்றேன். எனக்கு ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். நான் பார்த்த முதல் திரைப்படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

நெருக்கம்
தொடக்கத்திலிருந்தே அவருடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் தனியாகவே இருந்தார். ஆனால் எனது நட்பால் அவரது தனிமை குறைந்தது. ஜெயலலிதாவுக்கு பொது இடங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசை. ஆனால் அவர் சினிமா பிரபலம் என்பதால் வெளியே செல்ல முடியாத சூழல்.

மிகவும் ஆசை
இந்த ஆசையை என்னிடம் சொன்னார். இதையடுத்து நானும் ஜெயலலிதாவும் முக்காடு போட்டு கொண்டு யாருக்கும் தெரியாமல் திருவான்மியூர் சாலைகளில் நடந்து செல்வோம். ஜெயலலிதாவின் அறிமுகத்தினால் எம்ஜிஆரை நான் அவ்வப்போது சந்திப்பேன்.

எம்ஜிஆர் தோட்டம்
அவரது ராமாவரம் தோட்டத்திற்கு நான் செல்வேன். அப்போது எம்ஜிஆரை சந்திக்க கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் வருவதை எம்ஜிஆரின் தனிச் செயலாளரிடம் போனில் தெரிவிப்பேன். நான் சென்றதும் என்னை நேராக வந்து அவரது தனிச் செயலாளர் அழைத்து செல்வார்.

பர்னசல் அசிஸ்டென்ட்
இதை பார்க்கும் அங்கு காத்திருப்போர், யார் இவங்க, நாமெல்லாம் காத்திருக்கிறோம், இவங்க நேராக செல்கிறார்களே என பேசிக் கொள்வார்கள். இதனால் மூத்த அமைச்சர்களின் கோபத்துக்கு நான் ஆளாகியுள்ளேன். எம்ஜிஆர் என்னை பார்க்கும் போதெல்லாம் அம்முவை நன்றாக பார்த்துக் கொள் என கூறுவார் என்றார் சசிகலா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications