சசிகலா ஆதரவாளர்களுக்கு வந்த சோதனை.. அக்.16 வரவேற்பில் பறக்க போவது அதிமுக கொடியா? அமமுக கொடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு வரும் 16-ந் தேதி வருகை தரும் சசிகலாவுக்கான வரவேற்பில் அதிமுக கொடியை பயன்படுத்துவதா? அமமுக கொடியை பயன்படுத்துவதா? என அவரது ஆதரவாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு அக்டோபர் 16-ந்தேதி செல்கிறார் சசிகலா. மறுநாள் 17-ந்தேதி தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லம் மற்றும் ராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

இந்த 2 நாள் நிகழ்வுகளிலும் சசிகலாவுக்கு வரவேற்பு தருவதற்கான ஏற்பாடுகள் அமமுக கட்சி தரப்பில் ஜரூராக நடந்து வருகின்றன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

சென்னையில் அமமுக ஆலோசனை

சென்னையில் அமமுக ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட அமமுகவினர் இதில் கலந்து கொண்டனர். ஆலோசனையில், சசிகலாவுக்கு வரவேற்பு தருவது குறித்து பல தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டது. அதேசமயம், வரவேற்பில் நாங்கள் எந்த கொடியை உயர்த்தி பிடிப்பது என நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

எந்த கொடி? என்பதில் குழப்பம்

எந்த கொடி? என்பதில் குழப்பம்

அதாவது, வீட்டை விட்டு சசிகலா வெளியே வந்தால் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் தான் அவர் செல்கிறார். அதனால் சசிகலாவை வரவேற்கும் போது, அதிமுக கொடியை எடுத்து வரணுமா? அல்லது அமமுக கொடியை கொண்டு வரணுமா? என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் திணறியிருக்கிறார்கள்.

என்ன சிக்கல் வரும்?

என்ன சிக்கல் வரும்?

அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அ.ம.மு.க. கொடியைத்தான் எடுத்து வர வேண்டும் என விளக்கமளித்துள்ளனர். இதற்கிடையே, இதே விவகாரம் சசிகலாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் பொதுச்செயலாளர்ங்கிற உரிமை கோரி நீங்கள் தேர்தல் ஆணையத்திலும் கோர்ட்டிலும் வழக்கு போட்டிருக்கிறீர்கள். அந்த வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், உங்களை வரவேற்க அ.ம.மு.க.வினர் அவர்களின் கட்சி கொடியை எடுத்து வந்தால் அதுவே உங்களுக்கு பின்னடைவை தரலாம்.

சட்ட ரீதியாக நெருக்கடி?

சட்ட ரீதியாக நெருக்கடி?

அதாவது, அ.ம.மு.க. கொடியும் அவர்களது நிர்வாகிகளும் உங்களை வரவேற்கும் நிகழ்வில் பெரியளவில் இருந்தால், அதையையேச் சுட்டிக்காட்டி, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லை; அவர் அ.ம.மு.க. கட்சிகாரார் என சொல்லி எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் உங்களுக்கு எதிரான வழக்கில் சொல்லக்கூடும். அதனால், உங்களை வரவேற்பதில் அதிமுக கொடியும் பறக்க வேண்டும். அப்படி பறந்தால் தான் சட்டரீதியாக வரும் பின்னடைவுகளை எதிர்காலத்தில் சமாளிக்க முடியும். அதிமுக கொடிகள் அதிகம் இருக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சசிகலாவிடம் சொல்லியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+