எடப்பாடிக்கு எதிராக அதிரடி? அதிமுகவை புரட்டிப் போட வருகிறது 'சசிகலா புயல்'? குஷியில் ஓபிஎஸ் கோஷ்டி
சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வரும் 16-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு முதல் முறையாக சென்று மரியாதை செலுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அக்டோபர் 26-ந் தேதி எம்ஜிஆர் நினைவிடத்துக்கும் செல்ல உள்ளாராம் சசிகலா. இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்படலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
4 ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்குப் பின்னர் தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தேர்தல் நேரத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுக தாமாகவே தம் வசமாகும் என எதிர்பார்த்தார் சசிகலா. அதுவும் நடக்கவில்லை.

சசிகலாவின் ஆடியோ அரசியல்
அதனால் ஆடியோ அரசியல் யுத்தத்தை கையில் எடுத்தார் சசிகலா. ஆயிரக்கணக்கான அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் தினந்தோறும் தொலைபேசியில் பேசி அந்த உரையாடலை பதிவு செய்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தார் சசிகலா. அதிமுகவின் தோல்வி, ஓபிஎஸ் மீதான கரிசனம், இபிஎஸ் மீதான கோபம் என நவரசம் கலந்த கலவையாக சசிகலாவின் ஒவ்வொரு ஆடியோவும் இருந்தது. ஆனாலும் மிகப் பெரிய அளவு அந்த ஆடியோ யுத்தம் ஒர்க் அவுட் ஆகவில்லை.

எதுவும் நடக்கலை
பின்னர் தினகரன் வீட்டு திருமணம் மூலம் ஏதேனும் சசிகலா அண்ட்கோ திட்டமிடுமோ என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. அதுவும் நடக்காமல் போனது. அதேநேரத்தில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, பையனூர் பங்களா முடக்கம் என சசிகலாவை சுற்றித்தான் இன்னமும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் சசிகலாவுக்கு யாரும் இதுவரை என்ட் கார்டு போடவும் இல்லை.

ஜெ. நினைவிடம் செல்லும் சசிகலா
இந்நிலையில்தான் அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முதன்முறையாக ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கின்றன அவரது நெருக்கமான வட்டாரங்கள். அதிமுகவின் 50-வது ஆண்டு துவக்க விழாவை அக்டோபர் 17-ந்தேதி விமரிசையாக கொண்டாட அதிமுக தலைவர்கள் திட்டமிட்ட்டுள்ளனர். இதனை தவிடுபொடியாக்கும் வகையில் ஒருநாள் முன்னதாக அக்டோபர் 16-ந் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம் சசிகலா.

எம்ஜிஆர் இல்லத்துக்கும் போகிறாராம்
அத்துடன் இல்லாமல் அடுத்ததாக அக்டோபர் 27-ந்தேதி சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும், ராமாவரத்திலுள்ள எம்.ஜி.ஆர்.இல்லத்துக்கும் செல்லவும் முடிவு செய்திருக்கிறாராம் சசிகலா. இதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வின் ஆயிரம் விளக்கு என்.வைத்தியநாதனிடம் ஒப்படைத்துள்ளனராம். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியே வரும் சசிகலா, எடப்பாடிக்கு எதிராக அதிரடி கிளப்பக் கூடும் என்கின்றன சசிகலா ஆதரவு வட்டாரங்கள்.

ஓபிஎஸ் சர்ச்சை பேச்சு
அண்மையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது சசிகலா, தினகரனை சேர்க்க மறுத்த எடப்பாடியின் வியூகம்தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என மறைமுகமாக சாடியிருந்தார் ஓபிஎஸ். இதனால் எடப்பாடி தரப்பு ரொம்பவே கொந்தளித்து போயிருந்தது. இப்போது சசிகலாவும் அரசியல் களத்துக்கு வர முடிவு செய்துள்ளார். இது ஓபிஎஸ் தரப்பை ரொம்பவே குஷிப்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications