கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. மவுனம் கலைக்கிறாரா சசிகலா? நாலாதிசையிலும் எடப்பாடிக்கு சிக்கலா?
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி மீண்டும் ஆடியோ அல்லது வீடியோ வெளியிட சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த வழக்கில் சயான் மற்றும் மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை அறிக்கை நாளை உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சயான் ஏற்கனவே மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி இருந்தார். இதனால் நாளைய விசாரணை அறிக்கையில் இடம்பெறப் போகும் தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு வழக்கு
இதனிடையே கோடநாடு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க கோரி ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு ஏற்கனவே பெங்களூரு சிறையில் சொகுசாக இருக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக உள்ளது.

சசிகலாவின் மவுனம்
இந்த நிலையில் கோடநாடு வழக்கிலும் சசிகலா இழுத்துவிடப்படுகிறார். கோடநாடு எஸ்டேட் பங்களா பற்றிய முழு விவரம் அறிந்தவர்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும்தான். ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் சசிகலாதான் இதுபற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் சசிகலாவோ எதுவுமே பேசாமல் அமைதி காத்து வருகிறார். இது சசிகலா மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
Recommended Video

சசிகலாவை விசாரிக்க கோரிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரது சொத்து ஆவணங்களை கோடநாடு பங்களாவில் பதுக்கி வைத்திருந்ததாகவும் அதை மீட்பதற்காகவே சிலரால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. ஆனாலும் சசிகலா எதுவுமே பேசாமல் இருக்கும் நிலையில் நீதிமன்றத்திலும் அவரையும் விசாரித்தாக வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மவுனம் கலைக்கிறாரா?
ஏற்கனவே அதிமுகவை தன்வசப்படுத்த ஆடியோ அரசியலை கையில் எடுத்து தோற்றவர் சசிகலா. ஆனாலும் விடாது கருப்பாக கோடநாடு வழக்கு தொடர்பாக ஆடியோ அல்லது வீடியோ ஒன்றை சசிகலா விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. அப்படி வெளியாகும் ஆடியோ, வீடியோவில் பொத்தாம் பொதுவாக பேசப் போகிறாரா? அல்லது அதிமுகவை கைப்பற்ற விடாமல் சதி செய்தவர்களையும் கோர்த்துவிடப் போகிறாரா? என்பதுதான் எதிர்பார்ப்பு.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications