திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு.. பிரார்த்தனை என்னவாக இருக்கும்?
பூந்தமல்லி: ஜெயலலிதாவின் தோழி சசிகலா திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வந்தார்.
அப்போது அவர் தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். மேலும் அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவது குறித்தும் அவர் பேசியிருந்தார்.

அரசியல் வட்டாரங்கள்
இந்நிலையில், அவர் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அதிமுக அரசு மீண்டும் அமைய தான் எந்த வகையிலும் இடையூறாக இருக்க மாட்டேன் என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.

கருமாரியம்மன் கோயில்
இதற்கிடையே சசிகலா தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பரிகாரக் கோயில்களுக்கு கடந்த ஒரு மாதமாக சென்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.

சங்காபிஷேகம்
அவரை முக்கிய பிரமுகர்கள் சிலர் வந்து வரவேற்று கோயிலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் மூலவர் அம்மன், உற்சவர் அம்மன், பிரத்தியங்கிரா தேவி உள்பட பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னிதிகளிலும் வழிபாடு செய்தார். தொடர்ந்து 108 சங்காபிஷேக பூஜையில் அவர் கலந்து கொண்டார்.

காரில் புறப்பட்டார் சசிகலா
அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் எலுமிச்சை பழ மாலையை பிரசாதமாக வழங்கினார்கள். சசிகலாவை பார்த்ததும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். சசிகலாவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications